மேலும் அறிய

அய்யய்யோ.. அடுத்து இதுவா? பறவைக்காய்ச்சல் எச்சரிக்கை விடுத்துள்ள உலக சுகாதார மையம்!

இது கடல் பறவைகள், வாத்துகள், கோழிகள் போன்றவற்றைப் பாதிக்கிறது

உலக சுகாதார அமைப்பு (WHO) சமீபத்தில் பறவைக் காய்ச்சல் குறித்து எச்சரிக்கையை வெளியிட்டது. இது உலகிற்கு ஒரு புதிய அச்சுறுத்தல் என்றும் கூறியது. பறவைகள் மூலம் பரவும் வைரஸால் உண்டாகும் காய்ச்சல் பறவைக் காய்ச்சல் என்று அழைக்கப்படுகிறது. இது கடல் பறவைகள், வாத்துகள், கோழிகள் போன்றவற்றைப் பாதிக்கிறது. இது ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா வகை A வைரஸால் ஏற்படும் கடுமையான நோயாகும். 

பறவை காய்ச்சல்:

இந்த நோய் பறவைகளையும் மனிதர்களையும் தாக்கும். சமீபத்தில், உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில், பறவைக் காய்ச்சல் பறவைகளுக்கு மட்டுமல்ல, மனிதர்களுக்கும் அச்சுறுத்தலாக இருக்கலாம் என்று கூறப்பட்டது. அதன் நான்கு வகைகளான H5N1, H7N9, H5N6 மற்றும் H5N8 ஆகியவை மிகவும் ஆபத்தானவை. இதில், பாலூட்டி உயிரினங்களில் H5N1 வைரஸின் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளன.

பறவைக் காய்ச்சல் ஒரு ஜூனோடிக் வைரஸ், எனவே தற்போது, விலங்குகளுக்கு பரவும் அபாயம் அதிகம் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், கொரோனா வைரஸின் ஆரம்பகால பாதிப்புகளும் ஜூனோடிக் என்பதால் அதை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் அது எவ்வாறு பெருந்தொற்றாகப் பரவியது எனமும் எல்லோருமே கண்கூடாகக் கண்டோம். அதனால் தற்போது பறவைக் காய்ச்சலை உண்ணிப்பாக கவனிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

றவைக் காய்ச்சலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: 

உலக சுகாதார அமைப்பு இந்த நேரத்தில் இறந்த அல்லது நோய்வாய்ப்பட்ட வன விலங்குகளை தொடக்கூடாது என அறிவுறுத்தியுள்ளது. மேலும் அதனை உள்ளூர் அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தவும் கூறியுள்ளது. மையம் தேசிய அதிகாரிகளுடன் இணைந்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து, மனிதர்களில் H5N1 நோய்த்தொற்றின் நிகழ்வுகளை ஆய்வு செய்து வருகிறது. நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் தகவலின்படி, பறவைக் காய்ச்சல் வைரஸ் தொற்றாக் மனிதர்களுக்கு எந்த அறிகுறிகளும் தென்படாது. ஒருவேளை லேசான நோய் முதல் கடுமையான நோய் வரை தாக்கத்தை ஏற்படுத்தும். நிலைமை மோசமாக இருந்தால், பாதிக்கப்பட்டவரும் இறக்கக்கூடும்.

பறவைக் காய்ச்சல் அறிகுறிகள்:

மிக அதிக காய்ச்சல்
தசை வலி
கடுமையான மேல் முதுகு வலி
தலைவலி
இருமல் மற்றும் மூச்சுத் திணறல்
வயிற்றுப்போக்கு
வயிற்று வலி
சளியில் ரத்தம்
மார்பில் வலி
மூக்கு அல்லது ஈறுகளில் இரத்தப்போக்கு
கண்களில் நீர் ஆகியவை இந்த பாதிப்புக்கான அறிகுறிகள்

அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாகச் செய்ய வேண்டியது என்ன? 

தொற்று அபாயத்தில் இருப்பவர்கள், இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றைக் கண்டாலோ அல்லது அவர்களுக்கு சுவாசக் கோளாறுகள் இருந்தாலோ அருகில் உள்ள சுகாதார மையத்தை அல்லது மருத்துவரைத் தொடர்பு கொள்ள வேண்டும். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
Delhi Air Pollution: கார்களுக்கு தடை, பேருந்துகளும் ஓடாத சூழல் - இன்று முதல் புதிய விதிகள் அமல், மக்கள் குழப்பம்
Delhi Air Pollution: கார்களுக்கு தடை, பேருந்துகளும் ஓடாத சூழல் - இன்று முதல் புதிய விதிகள் அமல், மக்கள் குழப்பம்
Annamalai:
Annamalai: "நான் மோடிக்கு விசுவாசமான நாய்” - தவெகவுக்கு அண்ணாமலை பதிலடி.. நடந்தது என்ன?
ABP Premium

வீடியோ

TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
Delhi Air Pollution: கார்களுக்கு தடை, பேருந்துகளும் ஓடாத சூழல் - இன்று முதல் புதிய விதிகள் அமல், மக்கள் குழப்பம்
Delhi Air Pollution: கார்களுக்கு தடை, பேருந்துகளும் ஓடாத சூழல் - இன்று முதல் புதிய விதிகள் அமல், மக்கள் குழப்பம்
Annamalai:
Annamalai: "நான் மோடிக்கு விசுவாசமான நாய்” - தவெகவுக்கு அண்ணாமலை பதிலடி.. நடந்தது என்ன?
HOLIDAY: 2 நாள் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை
2 நாள் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
TNPSC, SSC, RRB தேர்வு.! தேர்வர்கள் எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
TNPSC, SSC, RRB தேர்வு.! தேர்வர்கள் எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Embed widget