![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
BNS:பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளியிடும் குற்றத்திற்கு என்ன தண்டனை? சட்டம் சொல்வது என்ன?
Bharatiya Nyaya Sanhita: பாலியன் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளியிட்டால் பாரதிய நியாய சன்ஹிதாவின் படி என்ன தண்டனை என்பது பற்றி விரிவாக காணலாம்.
![BNS:பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளியிடும் குற்றத்திற்கு என்ன தண்டனை? சட்டம் சொல்வது என்ன? What Is The Punishment For Sharing Rape Victim's Name, Photo Know What Law Says In BNS BNS:பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளியிடும் குற்றத்திற்கு என்ன தண்டனை? சட்டம் சொல்வது என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/22/91d25c26b423c7b524d9a4d21f5e1e351724308780596333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவமனையின் பெண் பயிற்சி மருத்துவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம், செய்தி ஊடகங்களில் வெளியான உயிரிழந்தவரின் பெயர், புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவை நீக்கமாறு உத்தரவிட்டது.
இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் ஜெ.பி. பர்திவாலா, மனோ மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது உயிரிழந்த பெண்னின் பெயர், புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவை ஊடகங்களில் வெளிவந்ததற்கு தலைமை நீதிபதி மிகுந்த கவலை தெரிவித்தார். மேலும் அவற்றை நீக்க உத்தரவிட்டார். பாலியன் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் பெயர், அடையாளம் உள்ளிட்ட விவரங்களை வெளியிடுவத சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும். பாரதிய நியாய சன்ஹிதா (bharat nyaya sanhita)-வின் படி தண்டனை என்ன என்பது பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
பாலியன் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளியிட்டால் என்ன தண்டனை?
பாரதிய நியாய சன்ஹிதா (bharat nyaya sanhita)-வின் படி, செக்சன் 72-ம் படி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களின் பெயர், விவரம் உள்ளிட்ட அடையாளங்களை அச்சிதழ் அல்லது இணையதளம் என வெளியிட்டால் அது குற்றமாக கருதப்படும். பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளியிடும் நபருக்கு அபராதத்துடன் கூடிய இரண்டு ஆண்டுகள் தண்டனை விதிக்கப்படும்.
பாரதிய நியாய சன்ஹிதா (bharat nyaya sanhita)-வின் பிரிவு 64-71 வரை சிறுமிகள், பெண்கள் ஆகியோருக்கு எதிரான பாலியன் வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்டவைகளுக்கு வழங்கப்படும் தண்டனை குறித்து பேசுகிறது.
பாரதிய நியாய சன்ஹிதா, 2023:
இந்திய தண்டனைச் சட்டம் 1860-க்கு மாற்றி பாரதிய நியாய சன்ஹிதா என்று பெயரிடப்பட்டது. இதில் சில மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளது. இதில் தேசதுரோகம் என்பது நீக்கப்படுள்ளது, பிரிவினைவாதம், கிளர்ச்சி, நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிராக தண்டனை வழங்கும் புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. சிறுவர்களை கூட்டு வன்கொடுமைக்கு உள்ளாக்குதல் மற்றும் கும்பலாக அடித்து கொலை செய்வது ஆகியவற்றிற்கு மரண தண்டனை வழங்க இந்த புதிய சட்டம் வகை செய்கிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)