Watch Video: செல்போன் வெளிச்சத்தில் சிகிச்சை தந்த மருத்துவர்! மின்வெட்டால் நோயாளிகள் கடும் அவதி - நீங்களே பாருங்க
கர்நாடகாவில் உள்ள அரசு மருத்துவமனையில் செல்போன் டார்ச் லைட் உதவியுடன் மருத்துவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த விவகாரத்தில் அரசுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

கர்நாடகாவில் அமைந்துள்ளது சித்ரதுர்கா மாவட்டம். இந்த மாவட்டத்தில் அரசு மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. உள்நோயாளிகளின் படுக்கை பிரிவுகளுடன் கூடிய இந்த மருத்துவமனைக்கு தினமும் 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர்.
செல்போன் டார்ச்சில் சிகிச்சை:
உள்நோயாளிகளாக ஏராளமானோர் அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதியாகியுள்ளனர். இந்த நிலையில், இரவு நேரத்தில் மின் தடை திடீரென மருத்துவமனையில் ஏற்பட்டுள்ளது. அப்போது, இரவு நேரப்பணிக்கான மருத்துவர் நோயாளிகளை நேரில் சென்று உள்நோயாளிகளை பரிசோதித்துக் கொண்டிருந்தார். இதனால், சிரமத்திற்கு ஆளான அவர் அங்கே அனுமதியாகி இருந்த நோயாளிகளை செல்போனில் உள்ள டார்ச் லைட் உதவியுடன் பரிசோதித்தார்.
மருத்துவமனை ஊழியர் ஒருவர் செல்போன் டார்ச் லைட்டைப் பிடித்துக் கொண்டு நிற்க, மருத்துவர் நோயாளிகளை பரிசோதனை செய்யும் காட்சியை அங்கே இருந்த ஒருவர் வீடியோவாக எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பகிர்ந்து பலரும், நோயால் அவதிப்பட்டுள்ள நோயாளிகளுக்கு இவ்வாறு மின்தடையை ஏற்படுத்தி மேலும் சிரமத்தை தருவது நியாயமா? என்று அரசாங்கத்தை கேள்வி எழுப்பியுள்ளனர். சிலர், மின்தடை ஏற்பட்டபோதிலும் செல்போன் டார்ச் லைட் உதவியுடன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
ಒಂದು ವರ್ಷದ ಗ್ಯಾರಂಟಿ ಕತ್ತಲು ಭಾಗ್ಯ ಇದು ವರ್ಷದ ಸಂಭ್ರಮಾಚರಣೆಯಲ್ಲಿರುವ @INCKarnataka ದ ಉಡುಗೊರೆ!@siddaramaiah ಸರ್ಕಾರ ಇಂದು ಆಸ್ಪತ್ರೆಗಳಿಗೂ ಕರೆಂಟ್ ಪೂರೈಸದಷ್ಟು ಹೀನಾಯ ಸ್ಥಿತಿಗೆ ಬಂದು ತಲುಪಿದೆ.
— BJP Karnataka (@BJP4Karnataka) May 21, 2024
ಖಜಾನೆ ಖಾಲಿ, ವಿದ್ಯುತ್ ಖಾಲಿ !
ಇದು ಖಚಿತನೇ ಉಚಿತನೇ ನಿಶ್ಚಿತನೇ ಚಿಪ್ಪು ಚೊಂಬು!#CongressFailsKarnataka pic.twitter.com/GFzLXa3c8y
காங்கிரசை விமர்சித்த பா.ஜ.க.:
இந்த வீடியோவை கர்நாடக மாநில பா.ஜ.க. அரசு அவர்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில், இதுதான் இருண்ட பாக்யா என்று பதிவிட்டுள்ளனர். அதாவது, கர்நாடகாவில் ஆட்சி செய்து வரும் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் கட்சி க்ருஹா ஜோதி என்ற திட்டத்தின் கீழ் 200 யூனிட்களுக்க கீழே இலவசமாக வீடுகளுக்கு வழங்குவதாக அறிவித்திருந்தது.
மின்தடை ஏற்பட்டுள்ள மருத்துவமனையில் மருத்துவர் செல்போன் டார்ச் உதவியுடன் சிகிச்சை அளிப்பதை இந்த திட்டத்துடன் ஒப்பிட்டு, அந்த மாநில பா.ஜ.க. விமர்சனம் செய்துள்ளது. கர்நாடகாவில் அமைந்துள்ள காங்கிரஸ் ஆட்சியில் இருண்ட பாக்கியம்தான் பரிசாக கிடைத்துள்ளது என்று பா.ஜ.க. அரசு விமர்சித்துள்ளது.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, மின்தடையால் பாதிக்கப்பட்ட மருத்துவமனைக்கு 24 மணி நேர மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உத்தரவாதம் அளித்துள்ளனர்.
மேலும் படிக்க: Bangladesh MP: பெரும் பரபரப்பு! வங்கதேச எம்.பி. கொல்கத்தாவில் படுகொலை - என்ன நடந்தது?
மேலும் படிக்க: அடுத்தடுத்து கூண்டில் சிக்கிய சிறுத்தைகள் - பதற்றத்தில் பாபநாசம் மக்கள்





















