Watch Video: சாப்பிடுறீங்களா? மூதாட்டியுடன் உணவை பகிர்ந்த கொண்ட ராகுல் காந்தி.. வைரல் வீடியோ
ஒரு உணவகத்தில் அமர்ந்து தேநீர் அருந்தி கொண்டிருந்தபோது, அங்கிருந்த வயதான பெண்ணுடன் ராகுல் காந்தி உணவை பகிர்ந்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள வயநாடுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது, ஒரு உணவகத்தில் அமர்ந்து தேனீர் அருந்தி கொண்டிருந்தபோது, அங்கிருந்த வயதான பெண்ணுடன் ராகுல் காந்தி உணவை பகிர்ந்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பின்னர், அந்த வயதான பெண்மணி ராகுல் காந்தியை கட்டி அணைத்து கொண்டார்.
Unscripted pure love and adoration - this is what a true leader receives when he selflessly works and fights for his people and his country. pic.twitter.com/4cbU0Khxce
— Congress (@INCIndia) July 3, 2022
தேனீர் கடையில், காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி. வேணுகோபாலுடன் ராகுல் காந்தி அமர்ந்திருந்தபோது இந்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. அப்போது, வேணுகோபாலை பார்த்து, "ஏன் அவங்க நம்முடன் உட்கார மாட்டிகிறாங்க...அவங்களுக்கு தேனீர் வேண்டுமா? என ராகுல் காந்தி கேள்வி எழுப்புகிறார்.
இதை, அந்த வயதான பெண்மணியிடம் மொழிபெயர்த்து சொன்ன கே.சி. வேணுகோபால், இருவரும் சாப்பிட்டு கொண்டிருந்த பிளேட்டில் இருந்து உணவை எடுத்து அவருடன் பகிர்ந்து கொண்டார். பின்னர், ராகுல் காந்தியும் பெண்மணியுடன் உணவை பகிர்ந்து கொண்டார். இவர்களுக்கிடையே நிகழ்ந்த இந்த உரையாடல், அந்த பெண் ராகுல் காந்தியின் முகத்தை அன்புடன் தொட்டு அவரை அணைத்து கொள்வதோடு முடிவடைகிறது.
இந்த வீடியோ, காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. அதில், "இயக்கப்படாத தூய அன்பும் மதிப்பும் கலந்த வெளிப்பாடு. ஒரு உண்மையான தலைவர் தன்னலமின்றி தனது மக்களுக்காகவும் நாட்டிற்காகவும் போராடும்போது பெறுவது இதுதான்" என பதிவிடப்பட்டுள்ளது.
கேரள பயணத்தின்போது, பல்வேறு நல திட்ட பணிகளை ராகுல் காந்தி தொடங்கி வைத்தார். இதுகுறித்து கே.சி. வேணுகோபால் தனது ட்விட்டர் பக்கத்தில், "வயநாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைத்து மக்களின் அபிமானத்தைப் பெறும் ராகுல்காந்தி" என பதிவிட்டுள்ளார்.
இதேபோல, முன்னதாக, தன்னை பார்ப்பதற்காக ஒரு நாள் முழுவதும் காத்து கொண்டிருந்த வயதான பெண்ணுடன் ராகுல் கைகுலுக்கி கட்டி அனைத்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்