Watch Video: "பறை வாசித்த பிரதமர் மோடி.." வாக்காளர்களை கவர புது அவதாரம்..! வைரலாகும் வீடியோ..!
கர்நாடக சட்டமன்ற தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி பறை இசைக்கருவியை வாசித்த வீடியோ வைரலாகி வருகிறது.
கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் வரும் மே 10-ந் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க.வும், காங்கிரசும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆட்சியை தக்க வைக்க பா.ஜ.க. தீவிர பல்வேறு வியூகங்களையும், கர்நாடகத்தில் மீண்டும் ஆட்சியை தக்கவைக்க காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பல அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளனர்.
பறை வாசித்த பிரதமர்:
பா.ஜ.க.விற்கு ஆதரவாக கடந்த சில மாதங்களாகவே பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்பட பல பா.ஜ.க. தலைவர்கள் கர்நாடகவில் அடிக்கடி முற்றுகையிட்டு வருகின்றனர். இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் பிரதமர் மோடி கர்நாடகவில் சூறாவளி சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளார்.
அந்த மாநிலத்தில் உள்ள சித்ரதுர்கா பகுதியில் தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி ஈடுபட்டார். அப்போது, பறை இசைக்கருவியை வாங்கிய இசைத்தார். பிரதமர் மோடியடன் பா.ஜ.க. முக்கிய தலைவர்களும் பறை கருவியை இசைத்தனர். பிரதமர் மோடி பெரும்பாலான இடங்களுக்கு செல்லும்போது இசைக்கருவிகள் இசைக்கப்பட்டிருந்தால் அதை வாங்கி இசைப்பதை வழக்கமாக வைத்துள்ளார். பல பொது நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி ட்ரம்ஸ் வாசித்த நிகழ்வும் அரங்கேறியுள்ளது.
#WATCH | Prime Minister Narendra Modi tried his hands on a traditional instrument today in Chitradurga, Karnataka.#KarnatakaElections pic.twitter.com/HVLnod41rG
— ANI (@ANI) May 2, 2023
பிரதமர் மோடி பறையிசை கருவியை வாசித்ததை கண்ட பொதுமக்கள் ஆரவாரம் செய்தனர். இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி ”வளர்ந்த இந்தியாவுக்கான உந்துசக்தியாக, வளர்ந்த இந்தியாவுக்கான வளர்ச்சி இயந்திரமாக கர்நாடகத்தை உருவாக்க வேண்டும். இதை நிறைவேற்ற, இரட்டை எஞ்சின் அரசை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும்” என்றார்.
களத்தில் 3 ஆயிரம் வேட்பாளர்கள்:
கர்நாடக சட்டசபை தேர்தலில் மொத்தம் 3 ஆயிரத்து 632 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இவர்களில் 1720 வேட்பாளர்கள் சுயேட்சையாக போட்டியிடுகின்றனர். மொத்தம் 224 தொகுதிகளுக்கு நடக்கும் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 13-ந் தேதி நடைபெற உள்ளது. பா.ஜ.க.வைச் சேர்ந்த முக்கிய தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெகதீஷ் ஷட்டர் காங்கிரசில் இணைந்தது உள்பட பல பின்னடைவுகள் பா.ஜ.க.விற்கு இந்த தேர்தலில் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி எதிர்க்கட்சியான காங்கிரசையும், ஜனதா தள கட்சியையும் மிக கடுமையாக விமர்சித்து பேசினார். காங்கிரசும், ஜனதா தளம் கட்சியும் வாரிசு அரசியலையும், சமூகத்தில் பிளவையும் ஏற்படுத்துவதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். மேலும் அவர்கள் ஊழல்வாதிகள் என்றும் குற்றம்சாட்டினார்.
மேலும் படிக்க: Rahul Gandhi: 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் வழக்கு - இடைக்கால உத்தரவு பிறப்பிக்க நீதிமன்றம் மறுப்பு
மேலும் படிக்க: Kite Hit Helicopter: கர்நாடக காங்,. தலைவர் சிவகுமார் சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்.... என்ன நடந்தது?