Watch Video: நான் இங்கே இருக்கேன்.. சத்தமில்லாமல் பக்கத்தில் வந்த சிறுத்தை! திகில் அடைந்த சுற்றுலா பயணிகள்!
ஆப்பிரிக்க நாடுகளில் வனவிலங்குகளுக்கு அருகே சுற்றுலா பயணிகள் அழைத்து செல்லப்படுகின்றனர். வனப்பகுதிகளின் அழிகியலை பார்த்து சுற்றுலா பயணிகள் பிரமிக்க செய்கின்றனர்.
வனப்பகுதிகளுக்குள்ளே சஃபாரி வாகனங்கள் செல்வது வழக்கமாகி விட்டது. குறிப்பாக, ஆப்பிரிக்க நாடுகளில் வனவிலங்குகளுக்கு அருகே சுற்றுலா பயணிகள் அழைத்து செல்லப்படுகின்றனர். வனப்பகுதிகளின் அழிகியலை பார்த்து சுற்றுலா பயணிகள் பிரமிக்க செய்கின்றனர்.
இந்நிலையில், இந்திய வனப் பணி அலுவலர் (IFS)சுரேந்தர் மெஹ்ரா ட்விட்டரில் பகிர்ந்துள்ள ஒரு வீடியோவில், வனப்பகுதிக்குள்ளே அமைந்துள்ள ஒரு பூங்காவை பார்க்க சுற்றுலாப் பயணிகள் சஃபாரி வாகனத்தில் அழைத்த செல்லப்படுகின்றனர்.
Man in Wild ..#WildlifeTourism #AnimalBehaviour #Cheetah 🐆 @susantananda3 pic.twitter.com/QbQ223eiEJ
— Surender Mehra IFS (@surenmehra) July 2, 2022
அப்போது, சுற்றுலா பயணிகள் ஏற்றிச் செல்லும் ஜீப்பில் ஒரு சிறுத்தை ஏறுவதைக் காணலாம். அந்த விலங்கு வாகனத்தின் மீது குதிப்பதையும் அதிர்ச்சியடைந்த சுற்றுலாப் பயணிகள் அதை நெருக்கமாகப் படம்பிடிக்கத் தொடங்குவதையும் வீடியோவில் காணலாம்.
சிறுத்தை முதன்முதலில் பின்பக்கத்தில் பொருத்தப்பட்ட வாகனத்தின் உதிரி சக்கரத்தின் மீது ஏறுகிறது. பின்னர், வாகனத்தின் உள்ளே ஏறுகிறது. விரைவாக வாகனத்தின் கூரைக்கு மேல் ஏறி சென்று, வனப்பகுதி முழுவதும் நோட்டம் விடுகிறது. இம்மாதிரியான காட்டு விலங்குகள் பற்றிய வீடியோவை அடிக்கடி பகிரும் வனப் பணி அலுவலர் சுசந்தா நந்தாவை டேக் செய்து மெஹ்ரா இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்து உள்ளார்.
The wild feels so much at ease because it is at home. The man/woman acts like it's an extra terrestrial experience. 😆
— Ranvir Deb (@ranvir_deb) July 2, 2022
Great video though.
இதுவரை, இந்த வீடியோ 13,000 முறைக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது. பலர் கமெண்ட் செய்து வருகின்றனர். அதில் ஒருவர், "காடே வீடாக இருப்பதால் விலங்கு மிகவும் நிம்மதியாக உணர்கிறது. பூமிக்கு அப்பாற்பட்ட அனுபவத்தை வீடியோவில் இருப்பவர்கள் அனுபவிக்கின்றனர்" என பதிவிட்டுள்ளார்.
The Cheetah now has a wonderful viewing platform, which can be moved as needed :)
— Mira S. Ghoshal (@MiraGhoshal) July 2, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்