மேலும் அறிய
Advertisement
(Source: Poll of Polls)
9 மணி நிலரவம் : மேற்கு வங்கத்தில் 7 சதவீதம், அசாமில் 6.46 சதவீதம் வாக்குகள் பதிவு
மேற்கு வங்கத்தில் காலை 9 மணி நிலவரப்படி 7 சதவீதம் வாக்குகளும், அசாமில் 6.7 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.
மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள 47 தொகுதிகளுக்கும், அசாம் மாநிலத்தில் உள்ள 30 தொகுதிகளுக்கும் முதற்கட்டமாக இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இரு மாநிலங்களிலும் தீவிரவாத மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் காலை 9 மணியளவில் 7 சதவீத வாக்குகளும், அசாம் மாநிலத்தில் 6.46 சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்தது. மேற்கு வங்கத்தில் சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக வேலை செய்யவில்லை என்று புகார்கள் எழுந்தது. இதையடுத்து, அதிகாரிகள் இயந்திரத்தை சரிசெய்தனர். அசாமில் உள்ள ரூபாகி வாக்குப்பதிவு மையத்தில் காலையிலே மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தேர்தல் 2024
தேர்தல் 2024
தேர்தல் 2024
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion