மேலும் அறிய

Sita: சீதையுடன் அக்பரா? பொங்கி எழுந்த விஷ்வ இந்து பரிஷத்.. சிங்கத்தின் பெயரால் புது சர்ச்சை!

சீதா என்ற பெண் சிங்கத்தையும் அக்பர் என்ற ஆண் சிங்கத்தையும் ஒரே வனவிலங்கு பூங்காவில் வைத்திருக்க விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.

பாஜக ஆட்சி அமைத்ததில் இருந்து தொடர் சர்ச்சைகள் எழுந்து வருகிறது. ஞானவாபி, மதுரா போன்ற இடங்களில் அமைந்துள்ள மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்ட வேண்டும் என இந்துத்துவ சிந்தனையாளர்கள் சர்ச்சையை கிளப்பி வருகின்றனர். அதுமட்டும் இன்றி, இஸ்லாமிய பெயர்கள் கொண்ட இடங்களுக்கு இந்து பெயர்கள் வைக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.

புது சர்ச்யைை கிளப்பிய விஷ்வ இந்து பரிஷத்:

சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக வெறுப்புணர்வு பரப்பப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், இன்று புதிய சர்ச்சை வெடித்துள்ளது. சீதா என்ற பெண் சிங்கத்தையும் அக்பர் என்ற ஆண் சிங்கத்தையும் ஒரே வனவிலங்கு பூங்காவில் வைத்திருக்க விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.

எதிர்ப்பு தெரிவித்தது மட்டும் இன்றி, இரு சிங்கங்களையும் ஒரே வனவிலங்கு பூங்காவில் வைத்திருக்கும் வனத்துறையின் முடிவுக்கு எதிராக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. கொல்கத்தா உயர் நீதிமன்ற ஜல்பைகுரி கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், "உலகம் முழுவதும் உள்ள அனைத்து இந்துக்களும் ராமரின் மனைவியான சீதையை தெய்வமாக கருதி வழிப்பட்டு வருகின்றனர். அந்த பெயரை சிங்கத்திற்கு வைத்திருப்பதை அறிந்து விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு மன வேதனை அடைந்துள்ளது. இது, தெய்வ நிந்தனைக்கு இணையான செயலாகும். அனைத்து இந்துக்களின் மத நம்பிக்கையின் மீதான நேரடித் தாக்குதலாகும்.

சீதை சிங்கத்துடன் அக்பர் சிங்கம் வைத்திருக்க எதிர்ப்பு:

சிங்கங்களுக்கு மாநில வனத்துறை பெயர் சூட்டியுள்ளது. மேலும், 'அக்பர்' சிங்கத்துடன் 'சீதா' சிங்கத்தை வைப்பது இந்து மதத்தை அவமதிக்கும் செயலாகும். சிங்கத்தின் பெயரை "சீதா" என்பதிலிருந்து வேறு ஏதேனும் பெயர் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்து மதத்துடன் தொடர்பில்லாத பெயரைக் கொண்டு விலங்கின் பெயரை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்" என விஷ்வ இந்து பரிஷத் குறிப்பிட்டுள்ளது. 

நீதிபதி சவுகதா பட்டாச்சார்யா முன்பு, இந்த மனு நேற்று பட்டியலிடப்பட்டது. இதையடுத்து, வரும் 20ஆம் தேதி இந்த மனு மீதான விசாரணை நடைபெறுகிறது.

திரிபுராவில் உள்ள செபஹிஜாலா விலங்கியல் பூங்காவில் இருந்து வங்கத்தில் உள்ள சஃபாரி பூங்காவிற்கு இந்த சிங்கங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. பூங்காவிற்கு கொண்டு வருவதற்கு முன்பே இந்த பெயர்தான் வைக்கப்பட்டிருப்பதாக வனத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

பதினாறாம் நூற்றாண்டில் முகலாய சாம்ராஜ்ஜியத்தில் மூன்றாவது பேரரசராக இருந்தவர் அக்பர். அதே சமயம், இந்து மதத்தில் தெய்வமாகக் கருதப்படுபவர் சீதை. ராமரின் மனைவி. வால்மீகி ராமாயணத்தில் இவரை பற்றி குறிப்புகள் இருக்கின்றன.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Gold and silver rate today : அப்பாடா.! இப்பவாவது குறைய மனசு வந்துச்சே.. குறைந்தது தங்கம் விலை- எவ்வளவு தெரியுமா.?
அப்பாடா.! இப்பவாவது குறைய மனசு வந்துச்சே.. குறைந்தது தங்கம் விலை- எவ்வளவு தெரியுமா.?
TN Roundup: SIR பணிகள் இன்று நிறைவு, தவெக தீவிரம், அமித் ஷா வருகை, ஜனநாயகன் வழக்கு - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: SIR பணிகள் இன்று நிறைவு, தவெக தீவிரம், அமித் ஷா வருகை, ஜனநாயகன் வழக்கு - தமிழகத்தில் இதுவரை
IND Vs Pak: யு-டர்ன் போட்ட பாகிஸ்தான்..! இந்தியா உடனான போட்டியில் பங்கேற்போம் - காரணம் சொன்ன அரசாங்கம்
IND Vs Pak: யு-டர்ன் போட்ட பாகிஸ்தான்..! இந்தியா உடனான போட்டியில் பங்கேற்போம் - காரணம் சொன்ன அரசாங்கம்
Chennai Metro Rail work: அசத்திய கழுகு.! களத்தில் இறங்கிய பெலிகன்- சென்னை மக்களுக்கு மெட்ரோவின் சூப்பர் அறிவிப்பு
அசத்திய கழுகு.! களத்தில் இறங்கிய பெலிகன்- சென்னை மக்களுக்கு மெட்ரோவின் சூப்பர் அறிவிப்பு
ABP Premium

வீடியோ

13 year boy austin |குடும்பத்தை காப்பாற்ற கடலில்குதித்த 13 வயது சிறுவன் ஆஸ்டின் நெகிழ்ச்சி பேட்டி
EV Velu Inspection |’’ஸ்டாலின் ஐயா வர்றாருஎல்லாம் கரெக்டா இருக்கணும்’’எ.வ.வேலு திடீர் INSPECTION
Police Attack North Indians | ’’டேய்..போடா ***பொழைக்க வந்த நாய் நீ’’ வடமாநிலத்தவரை தாக்கிய போலீஸ்
Pakistan Demand to ICC |
DMDK Premalatha | பேச்சாடா பேசுனீங்க.. காத்தடிக்கும் தேமுதிக Office, விருப்ப மனு பரிதாபங்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold and silver rate today : அப்பாடா.! இப்பவாவது குறைய மனசு வந்துச்சே.. குறைந்தது தங்கம் விலை- எவ்வளவு தெரியுமா.?
அப்பாடா.! இப்பவாவது குறைய மனசு வந்துச்சே.. குறைந்தது தங்கம் விலை- எவ்வளவு தெரியுமா.?
TN Roundup: SIR பணிகள் இன்று நிறைவு, தவெக தீவிரம், அமித் ஷா வருகை, ஜனநாயகன் வழக்கு - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: SIR பணிகள் இன்று நிறைவு, தவெக தீவிரம், அமித் ஷா வருகை, ஜனநாயகன் வழக்கு - தமிழகத்தில் இதுவரை
IND Vs Pak: யு-டர்ன் போட்ட பாகிஸ்தான்..! இந்தியா உடனான போட்டியில் பங்கேற்போம் - காரணம் சொன்ன அரசாங்கம்
IND Vs Pak: யு-டர்ன் போட்ட பாகிஸ்தான்..! இந்தியா உடனான போட்டியில் பங்கேற்போம் - காரணம் சொன்ன அரசாங்கம்
Chennai Metro Rail work: அசத்திய கழுகு.! களத்தில் இறங்கிய பெலிகன்- சென்னை மக்களுக்கு மெட்ரோவின் சூப்பர் அறிவிப்பு
அசத்திய கழுகு.! களத்தில் இறங்கிய பெலிகன்- சென்னை மக்களுக்கு மெட்ரோவின் சூப்பர் அறிவிப்பு
Plane Crash: ஓ மை காட்..! நடுரோட்டில் சரிந்து பல கார்களை முட்டி மோதிய விமானம் - பரபரப்பான வீடியோ வைரல்
Plane Crash: ஓ மை காட்..! நடுரோட்டில் சரிந்து பல கார்களை முட்டி மோதிய விமானம் - பரபரப்பான வீடியோ வைரல்
Jayaram: நடிகையுடன் 5 வருட காதல்.. தூது போன இயக்குநர்கள்.. ஜெயராம் வாழ்வில் இப்படி ஒரு சம்பவமா?
Jayaram: நடிகையுடன் 5 வருட காதல்.. தூது போன இயக்குநர்கள்.. ஜெயராம் வாழ்வில் இப்படி ஒரு சம்பவமா?
Upcoming 7 Seater: 7 சீட்டர்களுக்கு இனி பஞ்சமில்லை.. ப்ரீமியம் டூ பட்ஜெட், 5 மாடல்கள் - இன்ஜின் டூ EV எடிஷன் - விலை?
Upcoming 7 Seater: 7 சீட்டர்களுக்கு இனி பஞ்சமில்லை.. ப்ரீமியம் டூ பட்ஜெட், 5 மாடல்கள் - இன்ஜின் டூ EV எடிஷன் - விலை?
பச்சை பொய்..! லாம்போர்கினி கார், பணக்கார திமிர், காவல்துறையின் மட்டமான வேலை - கொதிக்கும் நெட்டிசன்கள்
பச்சை பொய்..! லாம்போர்கினி கார், பணக்கார திமிர், காவல்துறையின் மட்டமான வேலை - கொதிக்கும் நெட்டிசன்கள்
Embed widget