வெள்ளத்தில் மூழ்கிய பள்ளி... தண்ணீரில் மாணவர்களை நிற்க வைத்து நாற்காலியை பிடிக்க வைத்த ஆசிரியர்
பள்ளிக்குள் செல்ல மாணவர்களை குளம் போல தேங்கியிருந்த தண்ணீரின் மேல் நாற்காலியை பிடிக்க வைத்து ஆசிரியர் உள்ளே சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் கனமழை பெய்ததில் பள்ளி ஒன்று மூழ்கியுள்ளது. இதையடுத்து, பள்ளிக்குள் செல்ல மாணவர்களை குளம் போல தேங்கியிருந்த தண்ணீரின் மேல் நாற்காலியை பிடிக்க வைத்து ஆசிரியர் உள்ளே சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
#UttarPradesh | Viral Video Shows Teacher Entering Flooded School, Students Hold Chairs https://t.co/VfbrkyP4D9 pic.twitter.com/RICJfEt4CK
— NDTV (@ndtv) July 28, 2022
மாணவர்கள் போட்ட பிளாஸ்டிக் நாற்காலிகளின் மீது ஆசிரியர் ஏறி செல்லும் வீடியோ வைரலானதை அடுத்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தேங்கியுள்ள தண்ணீரில் மாணவர்கள் சிரமப்பட்டு நின்று நாற்காலியை பிடித்திருப்பதும் அதன் மீது ஆசிரியர் ஏறி சென்று பள்ளிக்குள் செல்வதையும் வீடியோவில் காணலாம். உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. புதன்கிழமை பெய்த தொடர் மழையால் பள்ளி வளாகம் வெள்ளத்தில் மூழ்கியது.
முன்மாதிரியாக இருக்க வேண்டிய ஆசிரியர்கள், இதுபோன்ற செயலில் ஈடுபடுவது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதேபோல, அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் மாணவர்களை மசாஜ் செய்யவைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
பள்ளிகளில் நடக்கும் பிரச்சினைகள் அதிகரித்துவரும் இந்த காலத்தில், மாணவர்கள் பலர் அதன் மூலம் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். இந்த குறிப்பிட்ட சம்பவம், ஹர்தோய் பகுதியில் உள்ள போகாரி தொடக்கப்பள்ளியில் நடந்துள்ளது.
Teacher having bicep Massage by students, Viral video from Hardoi UP govt school. pic.twitter.com/MF8lEQPvEZ
— Grading News (@GradingNews) July 27, 2022
அந்த வீடியோவில் மாணவர்களை மசாஜ் செய்ய சொன்ன ஆசிரியை ஊர்மிளா சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் அந்த பள்ளியின் உதவி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
வைரலான இந்த வீடியோவில், வகுப்பறையில் மாணவர் ஒருவர் அவருக்கு மசாஜ் செய்யும்போது அவர் நாற்காலியில் சொகுசாக அமர்ந்திருப்பதைக் காண முடிகிறது. இந்தச் செயலின்போது மற்ற மாணவர்களும் வகுப்பறையில் இருப்பதும், வீடியோவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ வைரலானதை அடுத்து ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்