Viral Video: ஸ்பீடோ மீட்டருக்குள் சுருண்டு கிடந்த பாம்பு..திணறிய பைக்கர்... அதிர்ச்சி வீடியோ!
ஹிஸ் சத்தம் சட்டென்று சுதாரித்து தன் வண்டியை அவர் ஓரமாக நிறுத்தி அவர் ஆராய்ந்தபோது ஸ்பீடோ மீட்டருக்குள் பாம்பு இருந்ததைக் கண்டறிந்து அதிர்ந்துள்ளார்.
உலகில் ஆச்சர்யத்தையும் பயத்தையும் ஒருசேர வரவழைக்கக்கூடிய உயிரினங்களில் முதன்மையானவை பாம்புகள். நேரில் நம்மை உறைய வைத்து முதுகை சில்லிட வைக்கும் அதே அனுபவத்தை பாம்புகள் வீடியோக்களிலும் வழங்குகின்றன. அந்த வகையில் முன்னதாக இருசக்கர வாகனத்தின் ஸ்பீடோ மீட்டருக்குள் பாம்பு ஒன்று சுருண்டு படுத்திருந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மத்தியப் பிரதேசம், நரசிங்பூரைச் சேர்ந்த நசீர் கான் என்பவரது பைக்கில் இந்தப் பாம்பு கண்டெடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக தனது வண்டியில் காலை அலுவலகத்துக்குச் செல்லும்போது பாம்பின் ஹிஸ் சத்தத்தைக் கேட்டுள்ளார். இதனைக் கேட்டு சட்டென்று சுதாரித்து தன் வண்டியை அவர் ஓரமாக நிறுத்தி அவர் ஆராய்ந்தபோது ஸ்பீடோ மீட்டருக்குள் பாம்பு இருந்ததைக் கண்டறிந்து அதிர்ந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அங்கிருந்த நபர்களின் உதவியுடன் கண்ணாடியை உடைத்து பாம்பை ஸ்பீடோ மீட்டருக்குள் இருந்து வெளியே எடுத்துள்ளார். தன் வண்டியை பொதுவாக இரவில் நிறுத்தும் பழக்கம் உடைய நசீர் கான், அப்போது எதுவும் பாம்பு நுழைந்திருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.
नरसिंहपुर। अगर आप अचानक मोटरसाइकिल के स्पीड मीटर में चाबी लगाते ही बड़ा सांप दिख जाए तो क्या होगा। ऐसा ही नजारा नरसिंहपुर जिले में देखने को मिला है।#Narsinghpur #Speedometer #Snake #KingKobra pic.twitter.com/b76OMIhXId
— Agniban (@DAgniban) October 18, 2022
இந்நிலையில், பாம்பு ஸ்பீடோ மீட்டரில் சுருண்டு கிடக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இதேபோல் முன்னதாக வானவில் வள்ள பெரிய மலைப்பாம்பை தன் நண்பன் என மிருகக்காட்சி சாலை காப்பாளர் ஒருவர் அறிமுகப்படுத்தும் வீடியோ இன்ஸ்டாவில் லைக்குகளை வாரிக்குவித்து வைரலானது.
வானவில் வண்ணத்தில் பார்த்தவுடன் முதுகெலும்பை சில்லிட வைக்கும் தோற்றத்தைக் கொண்ட இந்த மலைப்பாம்பை கையில் தூக்கிக் கொஞ்சுகிறார் ஜே ப்ரூவர் எனும் மிருகக் காட்சி சாலை காப்பாளர். அது மட்டுமல்லாது அதனை தன் நண்பன் என அறிமுகப்படுத்தியும் வைக்கிறார்.
View this post on Instagram
பல ஆண்டுகளாக இந்த மலைப்பாம்பை தான் பராமரித்து வந்துள்ளதாகவும் தற்போது இருவரும் நண்பர்களாகி உள்ளதாகவும் கூறி, ஜே ப்ரூவர் மலைப்பாம்பைக் கட்டியணைத்து வீடியோவில் நட்பு பாராட்டுகிறார். இந்த வீடியோ ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களைப் பெற்று இணையத்தில் ஹிட் அடித்து வருகிறது.
இதையும் படிங்க: Omni Bus Price Hike: தீபாவளிக்கு திக்குமுக்காட வைக்கும் ஆம்னி பேருந்துகள் சர்வீஸ்: கட்டணம் 3 மடங்கு உயர்வு!!