Viral Video: ரிவர்ஸ் கியரில் சாலையை அலறவிட்ட போதை டிரைவர்! சினிமா பாணியில் துரத்திய போலீஸ்!
உத்தரபிரதேசத்தில் சினிமா பாணியில் காரை போலீசார் துரத்திச் சென்ற வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
திரைப்படங்களில் பரபரப்பான சாலைகளில் வாகனங்களை பின்னால் இயக்கியபடியே கார் ஓட்டுவதும், அதை மற்ற வாகனங்கள் துரத்துவது போலவும் காட்சிகளை நாம் பார்த்திருப்போம். இந்த காட்சிகளை திரைப்படங்களுக்காக படமாக்குவதே மிகுந்த சிரமமாக இருக்கும். இதேபோல ஒரு சம்பவம் நிஜத்தில் உத்தரபிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் உள்ள பரபரப்பான நகரங்களில் ஒன்று காசியாபாத். காசியாபாத்தில் அமைந்துள்ளது ராஜ்நகர். இந்த பகுதியில் ஐ -20 கார் ஒன்றை ஒருவர் குடித்து விட்டு கட்டுப்பாடின்றி ஓட்டி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த காரை நிறுத்த முயற்சி செய்தனர்.
गाजियाबाद पुलिस ने आई ट्वेंटी कार रोकने का प्रयास किया। i–20 वाले ने बैक गियर डाला और पुलिस को खूब छकाया। खबर है कि कार वाला भाग निकला। ये पता नहीं चला है कि पुलिस उसको रोक क्यों रही थी। @Uppolice @dgpup @ghaziabadpolice #Ghaziabad pic.twitter.com/LoW9qZQxjP
— Arun (आज़ाद) Chahal 🇮🇳 (@arunchahalitv) February 22, 2024
ஆனால், அந்த கார் ஓட்டுனர் போலீசை பார்த்ததும் காரை நிறுத்தாமல் பின்னோக்கி ரிவர்ஸ் கியரில் காரை இயக்கினார். போலீசாரும் தங்களது பாதுகாப்பு வாகனத்தில் அந்த காரை துரத்திச் சென்றனர். இந்த சம்பவத்தை அந்த சாலையில் சென்ற சக வாகன ஓட்டிகள் வீடியோவாக எடுத்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இரவு நேரத்தில் வாகனங்கள் செல்லும் பரபரரப்பான சாலையில் சினிமா பாணியில் காரை போலீசார் துரத்திச் சென்றதும், அந்த கார் பின்னோக்கி இயக்கப்பட்டதும் வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து காசியாபாத் போலீஸ் ஆணையர் இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்துள்ளார். குடித்து விட்டு காரை இயக்கியது யார்? என்பது போன்ற தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
மேலும் படிக்க: Farmers Protest: பரபரப்பு..! சுட்டுக் கொல்லப்பட்ட விவசாயி - போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு, நடந்தது என்ன?
மேலும் படிக்க: Lok Sabha Election 2024: இறுதியானது தொகுதிப் பங்கீடு; உ.பியில் காங்கிரஸ்க்கு 17 சீட்டுகளை ஒதுக்கிய சமாஜ்வாதி