Viral News: மருத்துவமனைக்கு செல்ல முடியாத சூழல்..! வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் பிரசவம் பார்த்த டாக்டர்: காஷ்மீரில் நெகிழ்ச்சி சம்பவம்!
ஆறு மணி நேர போராட்டத்திற்கு பிறகு, அப்பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது. தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு - காஷ்மீரில் கடும் குளிர் நிலவி வருகிறது. அங்குள்ள கிராமம் ஒன்றில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பிரசவ நேரத்தில் உடல்நல சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதிக பனிப்பொழிவு காரணமாக அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல இயலவில்லை.
இப்படியான இக்கட்டான சூழலில் வாட்ஸ்-அப் வீடியோ கால் மூலம் டாக்டர் அறிவுறுத்தல்கள் வழங்க அப்பென் குழந்தையை ஆரோக்கியமாக நலமுடன் பெற்றெடுத்துள்ளார்.
கீரன் (Keran- primary health centre) என்ற கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் கர்ப்பிணி ஒருவருக்கு பிரசவம் சிரமமான சூழலில் ஏற்பட்டதுள்ளது. அந்த நேரத்தில் அவருக்கு கூடுதல் கவனிப்பு மற்றும் சிகிச்சை தேவைப்பட்டுள்ளது. வெகு நேரமாகியும் குழந்தை வெளியே வருவதில் சிக்கல் ஏற்பட்டதையடுத்து அவரை கடும் பனிப்பொழிவு காரணமாக மருத்துவமனைக்கும் கொண்டு செல்ல முடியவில்லை. அந்தக் கிராமம் மற்ற நகரங்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.
அங்கிருந்தவர்களுக்கு உதவி தேவைப்பட்டது. கடும் பனிப்பொழிவால் அவசர விமானத்திலும் அப்பெண்ணை அழைத்துவர எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது. என்ன செய்யலாம் என்று யோசித்தவர்கள், சூழல் குறித்து க்ரால்போரா (Kralpora) கிராமத்தில் உள்ள மருத்துவரை தொடர்புகொண்டு பனிப்பொழிவு தொடர்வதாகவும், பெண்ணை ஊரை விட்டு வெளியே அழைத்துவர முடியவில்லை என்றும் கூறியுள்ளனர்.
மகப்பேறு மருத்துவர் பர்வைஸ் (Dr Parvaiz), ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்த மருத்துவர் அர்ஷத் சோபி (Dr Arshad Sofi)-க்கு வீடியோ கால் மூலம் சிகிச்சை நடைமுறைகளை விளக்கியுள்ளார்.
ஆறு மணி நேர போராட்டத்திற்கு பிறகு, அப்பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது. தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு பலரிடமிருந்தும் பாரட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. நெருக்கடியாக சூழலில் தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஓர் உயிரை நலமுடன் இந்த உலகிற்கு வரவேற்றது நெகிழ்ச்சியான நிகழ்வு. அதேவேளையில், மருத்துவர்கள் சிறப்பாக செயல்பட்டதும் பாராட்டிற்குரியதாகும்.
மேலும் வாசிக்க..
Lovers day: ஃப்ரீ... ஃபிரீ....! காதலர் தினத்திற்கு வோடோஃபோன் அறிவித்த பம்பர் பரிசு...
மரியாதை கிடைக்கணுமா..? அலுவலகத்தில் தனியாக தெரிய வேண்டுமா..? இதை மட்டும் பின்பற்றுங்கள்..!