(Source: ECI/ABP News/ABP Majha)
New Vande Bharat Train: வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
சென்னையில் இருந்து பெங்களூரு வழியாக மைசூருக்கு இன்று முதல் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலை பெங்களூரில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
சென்னையில் இருந்து பெங்களூரு வழியாக மைசூருக்கு இன்று முதல் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலை பெங்களூரில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
நாட்டின் முக்கிய நகரங்களை 4-வழிச்சாலைகள் இணைத்தாலும், தனியார்மயமாக்கும் முயற்சிகள் தீவிரம் அடைந்தாலும், ரெயில் பயணத்தை விரும்புபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது.
மீட்டர் கேஜ் பாதையில், நீராவி என்ஜினில் ரெயில்கள் இயக்கப்பட்ட போது, ரெயிலுக்காக காத்திருப்பதற்கு பதிலாக. செல்ல வேண்டிய இடத்தை நடந்தே கடந்து விடலாம் என்று பேச்சுவழக்கில் கூறுவர். தற்போது இரட்டை அகலப்பாதை, மின்மய மாக்கல் என குறைந்தபட்சம் மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் செல்லும் வகையில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ரெயில்வே யில் உள்ளன.
முன்னதாக, பிரதமர் மோடி இன்று காலை 10 மணிக்கு தனி விமானம் மூலம் பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு வந்தார். பின்னர் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிறகு அவர் கார் மூலம் பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்திற்கு வந்தார். பின்னர், சென்னை-மைசூரு வந்தேபாரத் அதிவிரைவு ரெயில் சேவையை தொடங்கி வைத்தார்.
சென்னையில் இருந்து காலை 5.50 மணி புறப்படும் இந்த ரயில், காலை 10.25 மணிக்கு பெங்களூரு சென்றடையும். நண்பகல் 12.30 மணிக்கு மைசூரு சென்றடைகிறது.
காட்பாடி ரயில் நிலையத்திலும் இந்த ரயில் நின்று செல்லும். மைசூரில் இருந்து 1.05 மணிக்கு புறப்படும் ரயில் சென்னைக்கு இரவு 7.30 மணிக்கு வந்து சேரும். இந்த வந்தே பாரத் ரயில் 504 கி. மீட்டர் தொலைவை 6.5 மணி நேரத்தில் கடக்கும் என்று தெரிகிறது.
நாட்டின் ரயில்வே துறையில் புதிய சகாப்தமாக கருதப்படுவது வந்தே பாரத் ரயில். இந்திய ரயில் சேவையிலே அதிவேக ரயிலாக வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நாட்டில் 75 வந்தே பாரத் ரயிலை இயக்க மத்திய அரசு திட்டமிட்டது.
தென்னிந்தியாவிலே முதன்முறையாக சென்னை முதல் மைசூர் வரை வந்தே பாரத் ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், வந்தே பாரத் ரயிலுக்கான சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது. சென்னையில் இருந்து காட்பாடி வழியாக மைசூர் சென்றடைந்தது. இன்று காலை தொடங்கிய இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக மைசூரை சென்றடைந்து வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
TN Rain News LIVE: வட தமிழக கடலோரப் பகுதிக்கு "ரெட் அலர்ட்"
நாட்டில் 75 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ள நிலையில், அடுத்தடுத்து டெல்லி – அமிர்தசரஸ், டெல்லி – லக்னோ, கவுரா – ராஞ்சி, மும்பை – புனே, டெல்லி – போபால், பெங்களூர் முதல் கன்னியாகுமரி, கவுரா – பூரி, எர்ணாகுளம் – பெங்களூர், புனே – பெங்களூர், செகந்திராபாத் – திருப்பதி – பெங்களூர், சென்னை – கன்னியாகுமரி ஆகிய வழித்தடங்களிலும் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வந்தே பாரத் ரயில்களுக்கான வழித்தடத்தில் சில ரயில்கள் சதாப்தி ரயில்களுக்கு பதிலாக இயக்கப்பட உள்ளது.