Uttar Pradesh : சாப்பாடு சூடாக இல்லை எனக் கூறி 'முத்தலாக்' சொன்ன கணவன் ! காவல்துறையை நாடிய பெண்!
முன்னதாக இந்தியாவில் முத்தலாக் முறை தடை செய்யப்பட்ட நிலையில் , தடை சட்டத்தை மீறி இஸ்லாமிய பெண் ஒருவருக்கு முத்தலாக் முறையில் விவாகரத்து கூறியதால் பாதிக்கப்பட்ட பெண் உம்ரா காவல் நிலையத்தை அனுகியிருக்கிறார்.
![Uttar Pradesh : சாப்பாடு சூடாக இல்லை எனக் கூறி 'முத்தலாக்' சொன்ன கணவன் ! காவல்துறையை நாடிய பெண்! Uttar Pradesh man booked for ‘triple talaq’ to wife, because she ‘served dinner cold’ Uttar Pradesh : சாப்பாடு சூடாக இல்லை எனக் கூறி 'முத்தலாக்' சொன்ன கணவன் ! காவல்துறையை நாடிய பெண்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/01/3ed709577c6a5b7f8345588a792de3471662018370246224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபிட்டில் மனைவி தனக்கு சூடான உணவை பரிமாறவில்லை எனக் கூறி கணவன் தலாக் கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
முத்தலாக் கூறிய கணவர் :
உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபிட் பகுதியை சேர்ந்த முகமது சல்மான் என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் தனது மனைவிக்கு முத்தலாக் கொடுத்திருக்கிறார். அதற்கான காரணமாக மனைவி கூறுவதுதான் சற்று அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. அதாவது தனது மனைவியிடம் முகமது சல்மான் சமைத்த உணவு சூடாக இல்லை என சண்டையிட்டிருக்கிறார் இதான் எதிரொலியாக அவர் மனைவிக்கு மூன்று முறை தலாக் கூறியதாக கூறப்படுகிறது.
காவல் நிலையத்தில் புகார் அளித்த மனைவி :
முன்னதாக இந்தியாவில் முத்தலாக் முறை தடை செய்யப்பட்ட நிலையில் , தடை சட்டத்தை மீறி இஸ்லாமிய பெண் ஒருவருக்கு முத்தலாக் முறையில் விவாகரத்து கூறியதால் பாதிக்கப்பட்ட பெண் உம்ரா காவல் நிலையத்தை அனுகியிருக்கிறார். முத்தலாக் முறையில் விவாகரத்து கொடுத்து ஐந்து மாதங்களுக்குப் பிறகு கணவர் முகமது சல்மான் மற்றும் மாமியார் மீது புகார் கொடுத்துள்ளார். புரான்பூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் முஸ்லீம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019 இன் பிரிவு 3/4 மற்றும் IPC பிரிவுகள் 498-A (குடும்ப வன்முறைக்காக) 323 (தன்னிச்சையாக காயப்படுத்தியதற்காக), 354 (குற்றவியல் சக்தியைப் பயன்படுத்தியதற்காக) ஒரு பெண் மீது) மற்றும் 504 (அவமதிப்புக்காக) உள்ளிட்ட பிரிவுகளின் பேரின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வரதட்சணை கொடுமை :
உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஷெர்பூர் கிராமத்தைச் சேர்ந்த உம்ரா, கடந்த ஆண்டு மே 23 ஆம் தேதி சல்மானை திருமணம் செய்திருக்கிறார். திருமணம் ஆன நாளில் இருந்தே கணவர் தனக்கு அதிக பிரச்சனை கொடுத்ததாகவும் , உடல் மற்றும் மனநலம் என இரண்டு பிரச்சனைகளுக்கு ஆளானதாகவும் உம்ராம தெரிவித்துள்ளார். அதே போல உம்ராவின் மாமியாரும் , சல்மானின் தாயாரும் அவரிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.இது குறித்து கூறிய அசோக் பால் "இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளோம். இது தொடர்பாக விசாரிக்க மகளிர் காவலர்களை நியமித்துள்ளோம் . குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் வழங்கப்படும் " என தெரிவித்துள்ளார் .
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)