UttarPradesh Wedding Venue: இடிந்து விழுந்த பால்கனி.. 5 வயது குழந்தை உட்பட 3 பேர் பலி.. சோகத்தில் முடிந்த திருமண வைபோகம்..!
உத்திரபிரதேச மாநிலத்தில் திருமண மண்டபம் இடிந்து விழுந்ததில் 5 வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டம் சரோஜினி நகர் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நடந்த திருமணம் நிகழ்விற்காக, அங்குள்ள திருமண மண்டபம் ஒன்றில் பலர் கூடியிருந்தனர். திருமண சடங்குகளெல்லாம் முடிவடைந்த நிலையில், திருமணத்திறகு வந்த விருந்தினர்கள் இரவு 11.30 மணியளவில் சாப்பிட ஆரம்பித்திருந்தனர்.
அவர்கள் பால்கனியில் இருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, பால்கனியும் சுவரும் திடீரென்று இடிந்து விழுந்ததாகத் தெரிகிறது. எதிர்பாரமல் நடந்த இந்த விபத்தில் 5 வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்தனர். இன்னும் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 34 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறும் போது “ திடீரென்று சில நிமிடங்களில் பால்கனியும், சுவரும் இடிந்து விழுந்து விட்டது” என்று தெரிவித்தார்.
Two killed including a minor girl after roof collapsed during a wedding ceremony in Bijnor police limits of #Lucknow. pic.twitter.com/A8JIlCBR6c
— Arvind Chauhan अरविंद चौहान (@Arv_Ind_Chauhan) April 21, 2022