Watch Video: ஸ்மார்ட்ஃபோனை ஸ்மார்ட்டாக யூஸ் செய்த மூன்று குரங்குகள்.. மத்திய அமைச்சர் பகிர்ந்த வீடியோ.. இணையத்தில் வைரல்!
மூன்று குரங்குகள் சேர்ந்து அழகாக ஸ்மார்ட்போன் யூஸ் செய்யும் வீடியோ இணையத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.
சில நேரங்களில் விலங்குகள் செய்யும் ஒவ்வொரு விஷயங்களும் ரசிக்கும் படியாக இருக்கும். நம்மை அறியாமல் நம் கவனம் முழுவது அதன் செயல்களின் மீது திரும்பும். உதாரணமாக, ஒரு பூனை மதில் ஏறும்போதோ, திருட்டு தனமாக ஏதாவது ஒரு செயல்களை செய்யும்போதோ அவை அனைத்து ரசிக்கும்படியானவை.
இப்படி ஒருபுறம் இருக்க, இங்கே மூன்று குரங்குகள் சேர்ந்து அழகாக ஸ்மார்ட்போன் யூஸ் செய்யும் வீடியோ இணையத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
Look at the success of digital literacy awareness reaching an unbelievable level! pic.twitter.com/VEpjxsOZa3
— Kiren Rijiju (@KirenRijiju) January 19, 2023
அந்த வீடியோவில் உள்ள குரங்குகள் முன்பு ஒருவர் ஸ்மார்ட் போனுடன் நிற்பதை காணலாம். அதில் உள்ள ஒரு குரங்கு ஸ்மார்ட்போனை பல நாள் பழகியது போல அசால்ட்டாக யூஸ் செய்கிறது. மற்றொரு குரங்கு, முதலில் நிற்கும் அந்த குரங்கு என்ன செய்கிறது என்று பார்க்கிறது. மூன்றாவதாக உள்ள குரங்கு அந்த இரண்டு குரங்குகளின் கவனத்தை திசை திருப்ப முயற்சி செய்கிறது.
இதுகுறித்து மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ தனது ட்விட்டர் பக்கத்தில், “ டிஜிட்டல் கல்வியறிவின் விழிப்புணர்வின் வெற்றி நம்பமுடியாத நிலையை எட்டுவதை பாருங்கள்..!” என்று பதிவிட்டு இருந்தார். நேற்று மதியம் 1.30 மணிக்கு பதிவிடப்பட்ட இந்த வீடியோ, தற்போது வரை 3 லட்சத்திற்கு அதிகமானோர் பார்வையிட்டு, 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் லைக்ஸ்களை பெற்றுள்ளது.
முன்னதாக, ஹோட்டல் அறையில் தூங்கும் பெண் ஒருவரை யானை ஒன்று தன் தும்பிக்கையால் எழுப்பி விடும் காட்சி இணையவாசிகளிடையே ஹிட் அடித்தது.
View this post on Instagram
யானைகளை தேசிய விலங்காகக் கொண்ட யானைகளின் தேசமான தாய்லாந்து நாட்டின் ரிசார்ட் ஒன்றில் இருந்து எடுக்கப்பட்ட இந்த வீடியோவை சாக்ஷி எனும் பெண் பகிர்ந்துள்ளார்.
யானை தன்னை தூக்கத்தில் இருந்து எழுப்பும் வீடியோ பகிர்ந்துள்ள சாக்ஷி, இந்த ரிசார்ட்டில் யானைகளுக்கு உணவளித்து, அவற்றுடன் வாக்கிங் சென்று, குளிப்பாட்டி, விளையாடி என அனைத்தும் செய்து மகிழலாம் என்றும் இது மிகவும் புதுவிதமான அனுபவமாக இருந்தது என்றும் தெரிவித்திருந்தார்.