Unemployement: கொரோனாவுக்கு பின் இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் எப்படி..? புள்ளிவிவரங்கள் சொல்வது என்ன?
நாட்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 2021-ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 2022ல் குறைந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
Unemployement : நாட்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 2021-ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 2022ல் குறைந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
கொரோனா பாதிப்பு:
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் கொரோனா வைரஸ் முதன்முதலில் பரவியது. கொரோனா பரவியதையடுத்து உலகம் முழுவதும் திகைத்து முடங்கியது. உலகமே ஊரடங்கு, தடுப்பூசி, பூஸ்டர் தடுப்பூசி என கொரோனாவுடன் போராடத் தொடங்கியது. ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா, ஒமிக்ரான் என கொரோனா நிறைய திரிபுகளாக உருமாறியுள்ளது. இவற்றில் டெல்டா திரிபு தான் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்த கொரோனா ஊரடங்கு மக்களை புரட்டி எடுத்தது. இதனால் வேலைவாய்ப்பின்மை விகிதமானது நாளடைவில் பொது முடக்கத்தில் உச்சபட்சமாக இருந்தது. குறிப்பாக கொரோனா கால கட்டத்தில் அதாவது, 2018-19-ஆம் ஆண்டுக்கான வருடாந்திர தொழிலாளர் ஆய்வின் படி, 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் நிலவும் வேலைவாய்ப்பின்மை விகிதம் 23.5 சதவீதமாகும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
2022 வேலைவாய்ப்பின்மை விகிதம்
நாட்டில் கடந்த ஆண்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் குறித்து தேசிய புள்ளி விவர சேவை (NATIONAL SAMPLE SURVEY) ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வில் கொரோனா கால கட்டத்தில் (2019) இருந்த வேலைவாய்ப்பின்மையை விட கடந்த ஆண்டில் குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதன்படி, ஜனவரி-மார்ச் மாதத்தில் வேலைவாய்ப்பின்மை 8.2 சதவீதமாகவும், ஏப்ரல்-ஜூலை மாதத்தில் 7.6 சதவீதமாக இருந்ததாக கூறப்படுகிறது.
மேலும், ஜூலை-செப்டம்பர் மாதத்தில் வேலைவாய்ப்பின்மை என்பது 7.2 சதவீதமாக இருந்தது. மேலும், அக்டோபர்-டிசம்பர் மாதத்தில் வேலைவாய்ப்பின்மை விகிதமானது 8.7 சதவீதத்திலிருந்து 7.2 சதவீதமாக குறைந்துள்ளதாக தேசிய புள்ளி விவர சேவை (NSSo) நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பின்மை விகிதம்:
ஆண்களின் (15 வயதுக்கு மேற்பட்டவர்கள்) வேலைவாய்ப்பின்னை விகிதமானது அக்டோபர் - டிசம்பரில் 6.5 சதவீதமாகவும், ஜூலை-செப்டம்பரில் 6.6 சதவீதமாகவும், ஏப்ரல்-ஜூன் மாதத்தில் 7.1 சதவீதமாகவும் இருந்ததாக தெரிகிறது.
மேலும், மக்கள்தொகை அதிகம் கொண்ட கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் வேலைவாய்ப்பின்மையால் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. அதேபோன்று, வடகிழக்கு மாநிலங்களில் குறைந்தளவிலான மக்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கொரோனா பெருந்தொற்றின் காரணமாக அதிக அளவிலான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பினர். குறிப்பாக, பீகார், உத்தரப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அதிகம் பாதிப்படைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புள்ளிவிவரங்கள்:
புள்ளியியல் மற்றும் திட்ட செயலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளியியல் அலுவலகத்தால் வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்பின்மை குறித்து வருடாந்திர மற்றும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தொழிலாளர் ஆய்வு நடத்தப்படுகிறது (Periodic Labour Force Surveys , annual PLFS data ). அக்டோபர்-டிசம்பர் 2022ஆம் ஆண்டுக்கான குறிப்பிட்ட கால இடைவெளி தொழிலாளர் ஆய்வின் காலாண்டு அறிக்கையின் படி, ஜூலை-செப்டம்பர் 2022, ஏப்ரல்-ஜூன் 2022, ஜனவரி-மார்ச் 2022 காலாண்டுகளுக்கான 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை விகிதம் 6.5%, 8,3%, 6.6%, 7.7% ஆக உள்ளதாக புள்ளி விவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க