மேலும் அறிய

Umar Khalid : நாட்டின் பிரதமரை இப்படி விமர்சிப்பீர்களா? உமர் காலித் ஜாமின் மனு.. கேள்வியெழுப்பிய நீதிபதி

ஜூம்லா என்னும் சொல்லுக்கு தவறான வாக்குறுதி என்று பொருள்.

வடகிழக்கு டெல்லி கலவரத்தின் பெரிய சதி வழக்கில் மாணவச் செயற்பாட்டாளர் உமர் காலித்தின் ஜாமீன் மனுவை  இன்று விசாரித்தது டெல்லி உயர்நீதிமன்றம். இந்தியப் பிரதமரைப் பற்றி 'ஜூம்லா' என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது சரியானதா என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம். அரசாங்கத்தை விமர்சிக்கும்போது அதற்கு ஒரு வரையறை இருக்கவேண்டும் என கருத்து கூறியுள்ளது. ஜூம்லா என்னும் சொல்லுக்கு தவறான வாக்குறுதி என்று பொருள்.

“அவர் உரையில் பிரதமரைப் பற்றி என்ன சொல்கிறார்? சில 'தேவையற்ற' வார்த்தை பயன்படுத்தப்பட்டது மற்றும் அதற்குப் பிறகு ... இந்த 'ஜூம்லா' என்கிற சொல்லும் இந்தியப் பிரதமருக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அது சரியானதா?" என பிப்ரவரி 2020ல் அமராவதியில் காலித் பிரதமருக்கு எதிராகப் பேசிய கருத்து பற்றி கேள்வி எழுப்பியுள்ளது. 

காலித் சார்பாக நீதிமன்றத்தின் அவதானிப்புக்கு பதிலளித்த  மூத்த வழக்கறிஞர் திரிதீப் பைஸ், அரசாங்கத்தை விமர்சிப்பது சட்டவிரோதமானது அல்ல என்று வாதிட்டார். “அரசாங்கத்தை விமர்சிப்பது குற்றமாகிவிட முடியாது. அரசாங்கத்திற்கு எதிராகப் பேசும் ஒருவருக்கு UAPA குற்றச்சாட்டுடன் 583 நாட்கள் சிறைவாசம் கொடுப்பது நியாயமில்லை. நாம் அவ்வளவு சகிப்புத்தன்மையற்றவர்களாக ஆக முடியாது. இப்படி எச்சரிகை உணர்வுடனேயே மக்கள் பேச முடியாது” என்று வாதிட்டார். காலித் மீதான எஃப்ஐஆர் பேச்சு சுதந்திரத்திற்கு எதிரான சகிப்புத்தன்மையற்ற சூழலின் விளைவாகும் என்றும் அவர் கூறினார்.

ஏப்ரல் 22 அன்று, நீதிபதி சித்தார்த் மிருதுல் மற்றும் நீதிபதி ரஜ்னிஷ் பட்நாகர் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், இந்த மனுவை விசாரித்தபோது, ​​குற்றப்பத்திரிகையின் ஒரு பகுதியாக, ’அமராவதியில் காலித் பேசியது, புண்படுத்துவதாகவும், அருவருப்பானது மற்றும் வெறுக்கத்தக்கது” என்றும் கூறி இருந்தது. காலித் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தின் முன் அவர் ஆற்றிய உரையின் உள்ளடக்கத்தைப் படித்த பிறகு
“இது அவமானகரமானது, அருவருப்பானது என்று நீங்கள் நினைக்கவில்லையா? நீங்கள் பயன்படுத்திய சொற்கள்....அவை மக்களைத் தூண்டுவதாக நீங்கள் நினைக்கவில்லையா? இது தாக்குதலுக்குரியது. இந்த உரையில் நீங்கள் இவ்வாறு சொல்வது இது முதல் முறையல்ல. இதை நீங்கள் ஐந்து முறையாவது சொல்லியிருக்கிறீர்கள்” என்று டிவிஷன் பெஞ்ச் கூறியது.

”1920ம் ஆண்டு மகாத்மா காந்தி ஆங்கிலேயருக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார் என்றும் அப்போது தொடங்கப்பட்ட ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் கல்வி நிறுவனங்களில் முதன்மையானது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. காந்தியின் அழைப்புக்குப் பிறகு பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. அந்தப் பல்கலைக்க்ழகம்தான்  இப்போது தோட்டாக்களை எதிர்கொள்கிறது, அவதூறுகளைச் சந்தித்து வருகிறது, மற்றும் தேச விரோதிகளின் குகை என்று அழைக்கப்படுகிறது” என்றும் காலித் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
"அச்சத்தில் மக்கள்" புதிய பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு குறைபாடுகள்.. ரயில்வே அமைச்சருக்கு பறந்த கடிகம்!
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்?  -  அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்? - அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Father Crying : ’’FOOTBOARD அடிக்காதீங்க பா'’காலில் விழுந்து கதறிய தந்தை தேம்பி அழுத மாணவர்கள்BJP Councillor : ’’உதயநிதி பிறந்தநாளுக்கா?’’ SWEET கொடுத்த பாஜக கவுன்சிலர்!திமுக கவுன்சிலர் THUGLIFEKarur Drunken Girl | ”மூடிட்டு போங்க டி...” போலீஸை மிரட்டிய பெண் மதுபோதையில் ATROCITY! | MK Stalinவிஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
"அச்சத்தில் மக்கள்" புதிய பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு குறைபாடுகள்.. ரயில்வே அமைச்சருக்கு பறந்த கடிகம்!
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்?  -  அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்? - அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
TNUHDB : “90% காலி, 100% காலி” தள்ளாடும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்..!
TNUHDB : “90% காலி, 100% காலி” தள்ளாடும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்..!
Dhanush Aishwarya : தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வாங்கியாச்சு...குழந்தைகள் நிலைமை என்ன?
Dhanush Aishwarya : தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வாங்கியாச்சு...குழந்தைகள் நிலைமை என்ன?
காதலர் கொடுத்த மன உளைச்சல்: அசைவ உணவுக்காக உயிரை விட்ட பெண் விமானி? என்ன நடந்தது?
காதலர் கொடுத்த மன உளைச்சல்: அசைவ உணவுக்காக உயிரை விட்ட பெண் விமானி? என்ன நடந்தது?
Fengal Cyclone Update: ’’வரும்.. ஆனா வராது..’’ ஃபெங்கல் புயலாக கரையை கடக்காது; என்ன காரணம் தெரியுமா?
Fengal Cyclone Update: ’’வரும்.. ஆனா வராது..’’ ஃபெங்கல் புயலாக கரையை கடக்காது; என்ன காரணம் தெரியுமா?
Embed widget