மேலும் அறிய

ரூ.1.77 லட்சம் வரை சம்பளம்: யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு!

ரூ.1.77 லட்சம் வரை சம்பளம் பெறக்கூடிய கல்லூரி உதவிப் பேராசிரியர்களைத் தேர்வு செய்யும் யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ரூ.1.77 லட்சம் வரை சம்பளம் பெறக்கூடிய கல்லூரி உதவிப் பேராசிரியர்களைத் தேர்வு செய்யும் யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிக்கான தகுதியைப் பெற நெட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை (Junior Research Fellowship- JRF) பெறவும் நெட் தேர்வு அவசியம். இந்தத் தேர்வு தேசியத் தேர்வுகள் முகமையால் (NTA) நடத்தப்படுகிறது.

மொத்தம் 82 பாடங்களுக்கு நடைபெறும் இத்தேர்வு, ஆண்டுதோறும் 2 முறை நடத்தப்படுகிறது. கணினி மூலமாக இந்தத் தேர்வு காலை, மாலை என 2 ஷிஃப்டுகளாக நடைபெறுகிறது. இதில் உதவிப் பேராசிரியர் பணியில் இணைந்து இணைப் பேராசிரியராக உயருவோருக்கு அதிகபட்சமாக ரூ.1.77 லட்சம் வரை சம்பளம் அளிக்கப்படுகிறது. 

2020-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கான யுஜிசி நெட் தேர்வு மே மாதம் நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே கொரோனா பரவலால் கடந்த 2020 டிசம்பர், 2021 ஜூன் மாதங்களில் நெட் தேர்வு நடத்தப்படவில்லை. இதையடுத்து, 2 வாய்ப்பையும் சேர்த்து ஒரேகட்டமாக நெட் தேர்வுகள் கடந்த ஆண்டு நவம்பர் முதல் ஜனவரி வரை நடத்தப்பட்டன. நாடு முழுவதும் 239 நகரங்களில் 837 தேர்வு மையங்களில் இந்த நெட் தேர்வு நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் பிப்ரவரி மாதத்தில் வெளியாகின. 

இந்த நிலையில், டிசம்பர் 2021 மற்றும் ஜூன் 2022ஆம் ஆண்டுக்கான யுஜிசி தேர்வு அறிவிப்பு அண்மையில் வெளியானது. இதன்படி, தேர்வர்கள் மே 20ஆம் தேதி வரை யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். திருத்தங்களை மே 21 முதல் 23ஆம் தேதி வரை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில்,  யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அதில், தேர்வர்களின் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு ஒரே கட்டமாக நடத்தப்படும்  டிசம்பர் 2021 மற்றும் ஜூன் 2022ஆம் ஆண்டுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது. தேர்வர்கள் https://ugcnet.nta.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார். 

தேர்வுத் தேதி, ஹால் டிக்கெட் பெறுதல், தேர்வு மையங்கள் உள்ளிட்ட விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.

ரூ.1.77 லட்சம் வரை சம்பளம்: யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு!

விண்ணப்பக் கட்டணம் என்ன?

நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஒவ்வொரு பொதுப்பிரிவு மாணவரும் ரூ.1,100 செலுத்த வேண்டியது கட்டாயம். ஓபிசி பிரிவினருக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கும் ரூ.550 கட்டணம் ஆகும். எஸ்சி/ எஸ்டி பிரிவு மாணவர்களும் மாற்றுத்திறனாளி மாணவர்களும் மூன்றாம் பாலினத்தவரும் ரூ.275 செலுத்தினால் போதும். 

மாணவர்கள் ஆன்லைன் முறையில் https://ugcnet.nta.nic.in/ என்ற இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

கூடுதல் தகவல்களுக்கு: https://cdnbbsr.s3waas.gov.in/s301eee509ee2f68dc6014898c309e86bf/uploads/2022/04/2022043010.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

கூடுதல் விவரங்களுக்கு: 011-40759000

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
"இனி பணமே தேவை இல்ல" சாலை விபத்தில் சிக்கியவர்கள் நோ டென்ஷன்!
Embed widget