“இது சாதாரண விஷயமா? மெயில் செய்தும் பதிலில்லை” - எமிரேட்ஸ் விமானத்தை சாடியை மிமி சக்ரபோர்த்தி!
எமிரேட்ஸ் விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் தலைமுடி இருந்தது தொடர்பாக நடிகையும், திரிணாமூல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான மிமி சக்ரபோர்த்தி புகார் செய்துள்ளார்.
எமிரேட்ஸ் விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் தலைமுடி இருந்தது தொடர்பாக நடிகையும், திரிணாமூல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான மிமி சக்ரபோர்த்தி புகார் செய்துள்ளார். விமானங்களில் கரப்பான் பூச்சி, மூட்டைப் பூசி, விமான உணவில் கரப்பான் பூச்சி, பாட்சா பூச்சி என பலவகை புகார்களைப் பார்த்துள்ளோம். அந்த வகையில் உணவில் முடி இருந்தது தொடர்பான புகார் இது.
இது தொடர்பான புகைப்படத்தை நடிகையும், திரிணாமூல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான மிமி சக்ரபோர்த்தி தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில் ஒரு க்ராய்ஸன்ட் படத்தைப் பகிர்ந்த அவர், இந்த க்ராய்ஸன்ட் நடுவே ஒரு நீளமான முடி இருந்தது. அது குறித்து விமான நிறுவனத்திற்கு தெரிவித்தும் விமான நிறுவனம் ஒரு வருத்தமோ மன்னிப்போ தெரிவிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
Dear @emirates i believe u hav grown 2 big to care less abut ppl traveling wit u.Finding hair in meal is not a cool thing to do i believe.
— Mimi chakraborty (@mimichakraborty) February 21, 2023
Maild u nd ur team but u didn’t find it necessary to reply or apologise @EmiratesSupport
That thing came out frm my croissant i was chewing pic.twitter.com/5di1xWQmBP
மேலும், அன்புள்ள எமிரேட்ஸ் நீங்கள் உங்கள் பயணிகள் பற்றி அக்கறை கொள்வதைக் காட்டிலும் மிகப் பெரிய அளவிற்கு வளர்ந்துவிட்டீர்கள் என நினைக்கிறேன். உணவில் முடி இருப்பது சாதாரண விஷயமல்ல. நான் மெயில் செய்திருந்தேன். ஆனால் நீங்கள் பதில் சொல்லவில்லை. மன்னிப்பு கூட கேட்கவில்லை. இவ்வாறாக அவர் தொடர்ந்து பல ட்வீட்களை பதிவு செய்துள்ளார்.
அவரது ட்வீட் வைரலான நிலையில் எமிரேட்ஸ் நிறுவனம் ஒரு பதில் அனுப்பியுள்ளது."ஹலோ பென், உங்களுக்கு நேர்ந்த ஏமாற்றத்திற்காக வருந்துகிறோம். நீங்கள் தயவுசெய்து https://t.co/67ooSXMdYF என்ற ஹேண்டிலுக்கு தகவலை அனுப்புங்கள். உங்கள் இமெயில், தொடர்பு எண்ணையும் தெரிவியுங்கள். நாங்கள் அதை சரி பார்த்துவிட்டு நிச்சயமாக தொடர்பு கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளது.
Hello Ben, we're sorry to know about your disappointment. We'd request you to kindly DM https://t.co/67ooSXMdYF us your booking reference along with your email and contact number updated on your booking, we'll check and get back to you. Thank you.
— Emirates Support (@EmiratesSupport) November 25, 2022