மேலும் அறிய

Morning Headlines: பாலமேடு ஜல்லிக்கட்டு கோலாகல தொடக்கம்! ஆந்திர காங்கிரஸில் மாற்றங்கள் - முக்கியச் செய்திகள் இதோ

Morning Headlines January 16: கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை நடந்த இந்தியாவின் முக்கிய நிகழ்வுகளை இங்கே காணலாம்.

  • உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு கோலாகல தொடக்கம்! ஆயிரக்கணக்கில் குவிந்த மக்கள்!

பொங்கல் பண்டிகை முன்னிட்டு இன்று உலகபுகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று தை திருநாளாம் பொங்கல் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அதிகாலை முதலே மக்கள் வீட்டில் பொங்கல் வைத்து வழிப்பட்டு சிறப்பாக கொண்டாடினர்.

இன்று உழவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை அன்று நம் நினைவில் வருவது சர்க்கரை பொங்கல், கரும்பு மற்றும் மிக முக்கியமாக ஜல்லிக்கட்டு போட்டிகள். ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக கருதப்படுகிறது. மேலும் படிக்க..

  • ”பழகும் உறவிலே பிள்ளை நீயே” தமிழ்நாடு முழுவதும் மாட்டுப் பொங்கல் உற்சாக கொண்டாட்டம்!

பொங்கல் தினத்தின் இரண்டாம் நாளான இன்று தமிழ்நாடு முழுவதும் மாட்டுப் பொங்கல் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை நாம் தமிழ் மாதமான தை ஒன்றாம் தேதி கொண்டாடி வருகிறோம்.

விதைத்த நெல்லை அறுவடை செய்வதற்கும், வசந்த காலத்தை வரவேற்கும் விதமாகவும் தை மாத பிறப்பு மிகப்பெரிய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுவாக நம்மிடம் இயற்கை வழிபடும் பழக்கம் தலைமுறை தலைமுறையாக இருந்து வருகிறது. அந்த வகையில் விவசாயத்திற்கு ஆதரவாக திகழும் சூரியனுக்கும் இயற்கைக்கும் நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் பண்டிகை நேற்று தமிழக முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மேலும் படிக்க..

  • ஆந்திர காங்கிரஸில் மாற்றங்கள் ஆரம்பம்! மாநில தலைவர் ருத்ர ராஜு ராஜினாமா; ஒய்.எஸ்.ஷர்மிளாவுக்கு பொறுப்பு?

ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தற்போதைய ஆந்திர முதலமைச்சரின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. மக்களவை தேர்தலுடன், இந்தாண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலுக்கு முன், ஆந்திர மாநில காங்கிரசில் மாற்றங்கள் துவங்கியுள்ளன. இந்த மாற்றங்கள் காரணமாக, ஆந்திர பிரதேச காங்கிரஸ் கமிட்டி (APCC) தலைவர் பதவியில் இருந்து கிடுகு ருத்ர ராஜு ராஜினாமா செய்துள்ளார். இதன் பிறகு இந்தப் பதவிக்கு சமீபத்தில் டெல்லியில் காங்கிரஸில் இணைந்த ஒய்.எஸ். ஷர்மிளா நியமனம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க..

  • சிவசேனா கட்சி யாருக்கு சொந்தம்? உத்தவ் தாக்கரே எடுத்த அதிரடி முடிவு

சிவசேனா கட்சியை கைப்பற்றுவதில் உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே ஆகியோருக்கு இடையே பிரச்னை நீடித்து வரும் நிலையில், ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவாக மகாராஷ்டிர சபாநாயகர் எடுத்த முடிவுக்கு எதிராக உத்தவ் தாக்கரே வழக்கு தொடர்ந்துள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டு, சிவசேனா கட்சி தலைமைக்கு எதிராக அக்கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே கலகம் ஏற்படுத்தியதையடுத்து, கட்சி இரண்டாக உடைந்தது. மேலும் படிக்க..

  • அயோத்தியில் எகிறும் வீட்டு மனையின் விலை.. அமிதாப் பச்சன் போட்ட மெகா பிளான்.. என்னவா இருக்கும்?

உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி கோயில் திறக்கப்பட உள்ளது. கோயில் திறப்பு விழாவின்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார். மேலும் படிக்க..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’Rahul Gandhi | BJP-க்கு செக் வைத்த ராகுல்..எதிர்க்கட்சி தலைவரின் POWER! எகிறும் எதிர்பார்ப்புMR Vijayabaskar  : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
Watch Video: அடேங்கப்பா.. ஒரே ஓவரில் 43 ரன்கள் விளாசிய வீரர்..கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு சாதனையா!
Watch Video: அடேங்கப்பா.. ஒரே ஓவரில் 43 ரன்கள் விளாசிய வீரர்..கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு சாதனையா!
பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் எடுத்த விபரீத முடிவு! காஞ்சியில் சோகம்
பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் எடுத்த விபரீத முடிவு! காஞ்சியில் சோகம்
Viral Video: அரையிறுதிக்கு ரெடியான இந்திய அணி.. வெளியான வைரல் வீடியோ! ஹிட்மேன் ரோஹித் ஷர்மா குஷி!
Viral Video: அரையிறுதிக்கு ரெடியான இந்திய அணி.. வெளியான வைரல் வீடியோ! ஹிட்மேன் ரோஹித் ஷர்மா குஷி!
AIADMK: கள்ளச்சாராய விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி அதிமுக எம்.எல்.ஏ-க்கள் நாளை உண்ணாவிரத போராட்டம்?
AIADMK: கள்ளச்சாராய விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி அதிமுக எம்.எல்.ஏ-க்கள் நாளை உண்ணாவிரத போராட்டம்?
Embed widget