Morning Headlines: இன்று திறக்கப்படும் அயோத்தி விமான நிலையம்! மீண்டும் பல்டி அடிப்பாரா நிதிஷ் குமார்.. இன்றைய முக்கியச் செய்திகள்..
Morning Headlines: கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை நடந்த இந்தியாவின் முக்கிய நிகழ்வுகளை இங்கே காணலாம்.
- இன்று திறக்கப்படும் அயோத்தி விமான நிலையம்! புது பெயர் இதுதான்... வியப்பில் மக்கள்!
தேசிய அளவில் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேல் பரபரப்பை கிளப்பி வந்த அயோத்தி சர்ச்சை கடந்த 2019ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. சர்ச்சைக்குரிய இடம் இந்து தரப்பினருக்கு சொந்தம் என்றும் அங்கு அயோத்தி கோயில் கட்டவும் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதனை அடுத்து, உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் முடிவடைந்துள்ளன. 54,700 சதுர அடி பரப்பளவில் 360 அடி நீளமும், 235 அடி அகலமும், 16.5 அடி உயரமும் கொண்ட இந்த திருக்கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கோயில் வளாகத்தில் அருங்காட்சியகம், உணவகம் உள்பட பல்வேறு வசதிகள் பக்தர்களுக்காக செய்யப்பட்டு வருகிறது. மேலும், கோவில் கட்டுமான பணிக்காக ரூ.1800 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளது. மேலும் படிக்க..
- "அவர நம்ப முடியாது" மீண்டும் பல்டி அடிப்பாரா நிதிஷ் குமார்.. பாஜக பக்கம் சாய்கிறாரா?
தேசிய அளவில் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர் பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார். ஐக்கிய ஜனதா தள கட்சியை சேர்ந்த இவர், பிகார் மாநில முதலமைச்சராக 8 முறை பதவி வகித்துள்ளார். பாஜகவுக்கு எதிரான INDIA கூட்டணியை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றிய இவர், ஒரு காலத்தில் பாஜகவுடன் நெருக்கமான உறவை பேணி வந்தார். அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் வேளாண் துறை தொடங்கி ரயில்வே வரை பல முக்கிய துறைகளை தன் வசம் வைத்திருந்தார். 2005ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை, பிகார் மாநிலத்தில் பாஜகவுடன் கூட்டணி ஆட்சி நடத்தி வந்தார். மேலும் படிக்க..
- வரலாற்றை மாற்றி எழுதுமா அமைதி ஒப்பந்தம்? உல்ஃபா அமைப்புக்கு எண்ட் கார்டு போட்ட மத்திய அரசு
இந்தியாவில் பல பிரிவினைவாத குழுக்கள் இயங்கி வருகின்றன. அதில் முக்கியமான ஒன்று உல்ஃபா (அசோம் ஐக்கிய விடுதலை முன்னணி) அமைப்பு. நாட்டின் வடகிழக்கு பகுதியில் இயங்கி வந்த மிகப் பெரிய பிரிவினைவாத குழுக்களில் ஒன்றான உல்ஃபா, கடந்த 1979ஆம் ஆண்டு, அஸ்ஸாம் மாநிலம் சிவசாகரில் தொடங்கப்பட்டது. பூர்வீக அஸ்ஸாம் மக்களுக்கான சுதந்திரமான இறையாண்மைமிக்க நாட்டை நிறுவும் நோக்கத்துடன் உல்ஃபா அமைப்பு உருவாக்கப்பட்டது. பரேஷ் பருவா, அரபிந்தா ராஜ்கோவா மற்றும் அனுப் சேத்தியா போன்றவர்களின் தலைமையில் இந்த குழு, 1980களின் பிற்பகுதியில் ஆயுதமேந்திய நடவடிக்கைகளில் ஈடுப்பட்டது. மேலும் படிக்க..
- 5 உயர்நீதிமன்றங்களுக்கு புது தலைமை நீதிபதிகள்: உச்சநீதிமன்றம் கொலிஜியம் அதிரடி
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உள்பட மூத்த நீதிபதிகள் கொண்ட கொலிஜியம் அமைப்பே உயர் நீதிமன்றத்திற்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் நீதிபதிகளை நியமனம் செய்து வருகிறது. நீதிபதிகள் நியமன விவகாரத்தில், கொலிஜியம் பரிந்துரை செய்த நீதிபதிகளை நியமிக்காமல் மத்திய அரசு தாமதம் செய்வதாக உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், ஐந்து உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகளை இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. மேலும் படிக்க..