Top 10 News Headlines: எலும்பு முறிவுக்கு 3 நிமிடத்தில் தீர்வு, விஜயை ஒருமையில் பேசிய சீமான் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines Today Sept 15th: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

”அன்புக் கரங்கள்” திட்டம்
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவித் தொகை தரும் அன்புக் கரங்கள் திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படும்.
விஜயை ஒருமையில்சாடும் சீமான்
மக்களின் பிரச்னைகளை கூட எழுதி வைத்து படிக்கிறார் விஜய். எழுதி வைத்து படிப்பதற்கும், இதயத்தில் இருந்து படிப்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. கொள்கை இல்லாத தற்குறிகள் நிறைந்த கூடாரமாக தமிழக வெற்றிக் கழகம் இருக்கிறது என விஜயையும் ஒருமையில் விமர்சித்த சீமான்.
புரிய வேண்டியவர்களுக்கு புரியும்
“பேரறிஞர் அண்ணாவின் பெயரால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை எம்ஜிஆர் உருவாக்கினார், ஜெயலலிதா அதனை கட்டிக் காத்து வளர்த்தார். அதிமுக ஒன்றிணையும் விவகாரத்தில், தொண்டர்கள் கருத்தையே நான் பிரதிபலித்தேன். அது புரிய வேண்டியவர்களுக்கு புரியும் -கோபியில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு
இன்றே கடைசி நாள்
2024-25 நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய இன்றே கடைசி நாளாகும். தவறினால் வட்டியுடன் அபராதமும் செலுத்த வேண்டியிருக்கும். இதுவரை 6 கோடிக்கும் அதிகமான வருமான வரிக் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாக தகவல்.
முக்கிய வழக்கில் இன்று தீர்ப்பு
வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாக்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இன்று இடைக்கால உத்தரவை பிறப்பிக்கிறது உச்ச நீதிமன்றம். வக்ஃபு வாரிய திருத்த சட்டத்தின் கீழ் எந்த நியமனங்களையும் மேற்கொள்ளக் கூடாது என உச்சநீதிமன்றம் ஏற்கனவே இடைக்கால உத்தரவு பிறப்பித்து இருந்தது. அந்த உத்தரவை நீக்குவது தொடர்பாக இன்று உச்சநீதிமன்றம் தனது உத்தரவை வழங்க உள்ளது.
பாதுகாப்புப் படையை தாக்கிய மணிப்பூர் இளைஞர்கள்
மணிப்பூரில் பிரதமர் மோடியின் கட்அவுட்டை சேதப்படுத்தியதாக 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து, பாதுகாப்புப் படை மீது கற்களை வீசி தாக்கிய இளைஞர்கள்.
மணிப்பூரின் சூரசந்த்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையுடன் பயங்கர மோதலில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். பதற்றம் அதிகரித்ததால் இரு இளைஞர்களும் விடுவிக்கப்பட்டனர். அதன் பின் நிலைமை சீரானதாக போலீசார் விளக்கம்.
சாலை விபத்தில் நிதி அமைச்சக அதிகாரி பலி
டெல்லியில் மனைவியுடன் பைக்கில் சென்று கொண்டிருந்த ஒன்றிய நிதியமைச்சக அதிகாரி நவ்ஜோத் சிங், BMW கார் மோதிய விபத்தில் உயிரிழந்தார். மனைவி படுகாயம். BMW காரை பெண் ஒருவர் ஓட்டி வந்துள்ளார். அவரும், அவரது கணவரும் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.
சிறந்த விமான நிறுவனம்
உலகின் சிறந்த விமான நிறுவனமாக Air Canada தேர்வ்ய் . APEX 2026 விருது விழாவில், Five-Star Global Airline விருதை 6-வது முறையாக வென்று Air Canada அசத்தல்.
எலும்பு முறிவை 3 நிமிடத்தில் சரிசெய்யலாம்
எலும்பு முறிவு ஏற்பட்டால், இனி அறுவை சிகிச்சைக்கு பதில், 3 நிமிடத்தில் அதனை ஒட்டி சரி செய்யும் பசையை சீனாவின் ஜெஜியாங் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
'Bone-02' என அழைக்கப்படும் இந்த பசை, ரத்தம் இருந்தால் கூட, இரு எலும்புகளையும் துல்லியமாக ஒட்டிவிடும் என்றும், 150 பேருக்கு நடந்த சோதனை வெற்றி அடைந்ததாகவும் கூறியுள்ளனர்.
இந்தியா புறக்கணிப்பு
இந்தியாவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் Post-Match Presentation-புறக்கணித்த பாக். கேப்டன் சல்மான் அகா. பாகிஸ்தான் வீரர்களுடன் சூர்யகுமார் கைக்குலுக்காமல் சென்றதே இதற்கு காரணம் என அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் மைக் ஹெசன் விளக்கம்.





















