Top 10 News Headlines: கனமழையால் கடற்கரைகள் மூடல், விஜய் சந்திப்பு, பிரதிகா அவுட்? - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines Today Oct 27th: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

சென்னையில் மழை - மோன்தா அப்டேட்
வங்கக் கடலில் உருவாகியுள்ள மோன்தா புயல் ஆந்திராவை நோக்கி நகர்ந்து வருகிறது. சென்னையில் இருந்து சுமார் 560 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த புயலால், தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.
ராகுலை புகழ்ந்த ஸ்டாலின்
”தமிழ்நாடு, நாட்டின் வளர்ச்சிக்காக திமுக, காங்கிரஸ் ஒரே அணியில் பயணித்து கொண்டிருக்கிறோம்; அரசியல் மட்டுமல்ல கொள்கை உறவாக வலுப்பட்டு இந்தியாவின் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது ராகுல் காந்தி என் மீது காட்டும் அன்பை வார்த்தைகளால் சொல்ல முடியாது ராகுல் காந்தி பற்றி பேசும்போது சகோதரர் என கூறுவதற்கு காரணம் அவர் என்னை அண்ணன் என அழைப்பதுதான்” - ஸ்டாலின்
பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த விஜய்
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை, தவெக தலைவர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார். சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள ஒரு விடுதியில் இந்த நிகழ்வு நடைபெற்று வருகிறது. சம்பவம் நடந்த ஒரு மாதத்திற்கு பிறகு பாதிக்கப்பட்டவர்களை விஜய் சந்தித்து வரும் சூழலில், ஏற்கனவே அவர்களது வங்கிக் கணக்கில் இழப்பீடாக ரூ.20 லட்சம் செலுத்தப்பட்டுள்ளது.
இன்று மாலை நடக்கிறது சூரசம்ஹாரம்
கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறுகிறது.
திருச்செந்தூர் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ள நிலையில், பாதுகாப்புப் பணியில் 4,000 போலீசார்.
மோன்தா புயல் எதிரொலி-ஆந்திராவில் கடற்கரைகள் மூடல்
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மோன்தா புயல் காரணமாக ஆந்திராவில் உள்ள கடற்கரைகள் மூடப்பட்டுள்ளன கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, நெல்லூர் உள்ளிட்ட கடற்கரைகள் முன்னெச்சரிக்கையாக மூடல்; ஆந்திராவில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் கடலோர மாவட்டங்களில் கடல் சீற்றமாக உள்ளது.
புதிய தலைமை நீதிபதி யார்?
தனக்கு அடுத்தபடியாக நீதிபதி சூர்யகாந்த்தை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம் செய்ய மத்திய சட்டத்துறைக்கு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பரிந்துரைக் கடிதம். உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியாக பணியில் உள்ள நீதிபதி சூர்யகாந்த் பெயரை பரிந்துரை செய்துள்ளார் கவாய். நவம்பர் 23 ஆம் தேதியுடன் அவரின் பதவிக்காலம் நிறைவு பெறுகிறது
பிரதமர் மோடி நம்பிக்கை
21-ஆம் நூற்றாண்டு இந்தியா மற்றும் ஆசியான் அமைப்பின் நூற்றாண்டு என பிரதமர் மோடி கருத்து. 2047-இல் வளர்ந்த நாடாக உருவாகும் இந்தியாவின் இலக்கு மனித குலம் முழுமைக்கும் ஒளி மயமான எதிர்காலத்தை உருவாக்கும் என்றும் உறுதி.
பாஜக அமைச்சரால் சர்ச்சை
”ஆஸ்திரேலிய வீரர்கள் யாரிடமும் சொல்லாமல் ஏன் வெளியே சென்றார்கள். பயிற்சியாளரிடம்கூட சொல்லாமல் வெளியே சென்றுள்ளார்கள் அவர்களின் பக்கமும் தவறு இருக்கிறது” - ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் வீரர்கள் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பாலியல் ரீதியாக துன்புறத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, பாஜக அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா சர்ச்சை கருத்து
அரையிறுதியில் பிரதிகா ராவல் பங்கேற்பாரா?
ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையில், வரும் 30ம் தேதி நடைபெற உள்ள அரையிறுதியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோத உள்ளன. இந்நிலையில் நேற்றைய வங்கதேச அணிக்கு எதிரான லீக் போட்டியில், இந்திய அணியின் தொடங்க வீராங்கனையான பிரதிகா ராவல் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், நடப்பு உலகக் கோப்பையில் அதிக ரன் சேர்த்த இரண்டாவது வீராங்கனையான அவர், அரையிறுதியில் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இந்திய அணி சாம்பியன்
தெற்காசிய சீனியர் தடகளப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா. ஒட்டுமொத்தமாக
20 தங்கம் உள்பட 58 பதக்கங்களை குவித்து இந்திய வீரர், வீராங்கனைகள் அசத்தல்.





















