மேலும் அறிய
(Source: Poll of Polls)
Top 10 News Headlines: புயல் உருவாக வாய்ப்பில்லை, டெல்டா செல்லும் இபிஎஸ், மோடியை மீண்டும் வம்பிற்கிழுக்கும் ட்ரம்ப் - 11 மணி செய்திகள்
Top 10 News Headlines Today Oct. 22nd: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

11 மணி தலைப்புச் செய்திகள்
Source : ABP
- வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 12 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு.
- வங்கக் கடலில் இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பில்லை என வானிலை ஆய்வு மையம் தகவல்.
- சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு! மாநில அரசு தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், அரசு அலெர்ட்டாக உள்ளதாகவும் பேட்டி.
- கனமழையை தொடர்ந்து ஆய்வு பணிகளை மேற்கொள்ள, டெல்லா மாவட்டங்களுக்கு இன்று பயணிக்கிறார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.
- சென்னையில் இன்று காலை வெயில் எட்டிப் பார்த்த நிலையில், தற்போது மீண்டும் மழைப்பொழிவு தொங்கியுள்ளது.
- சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,400 குறைந்து 93 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை - ஒரு கிராம் ரூ.11,700-க்கு விற்பனை.
- சர்வதேச அளவில் தங்கத்தின் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. ஒரே நாளில் 6.3% சரிந்து, ஒரு அவுன்ஸ் சுமார் 4,082 டாலர்கள் வரை வர்த்தகம். 2013-க்கு பிறகு ஒரே நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய வீழ்ச்சி இதுவாகும்.
- கேரளா பத்தனம்திட்டாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வந்திறங்கிய ஹெலிகாப்டரின் டயர் கான்கிரீட் தளத்தில் சிக்கிய நிலையில், தீயணைப்பு வீரர்கள் அதனை சிறிது தூரம் தள்ளி மீட்டனர்.
- ஆந்திராவின் இந்துபுரத்தில் ரூ.1000 மதிப்புள்ள வெள்ளி செயினிற்காக இளைஞர் ஒருவரை பாட்டிலால் அடித்து, முகத்தில் பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற 2 சிறுவர்கள் கைது.
- அமெரிக்க வெள்ளை மாளிகையில் குத்து விளக்கை ஏற்றி வைத்து இந்தியர்களக்க அதிபர் ட்ரம்ப் தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். விழாவில், FBI இயக்குநர் காஷ் படேல், தேசிய புலனாய்வு இயக்குநர் துளசி கப்பார்ட் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
- ரஷ்யாவிடமிருந்து இந்தியா அதிக எண்ணெய் வாங்காது என்று மோடி தனக்கு உறுதியளித்ததாகவும், ரஷ்யா-உக்ரைன் போர் முடிவுக்கு வர வேண்டும் என்றும் அவர் விரும்புவதாகவும் ட்ரம்ப் ஏற்கனவே சொன்னதை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















