Top 10 News Headlines: ஸ்க்ரீன்ஷாட் மோசடி, குஜராத்தில் மோடி, புதினை திட்டிய ட்ரம்ப் - டாப் 10 செய்திகள்
Top 10 News Headlines Today May 26: இந்தியா முழுவதும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.

நீலகிரி, கோவையில் கனமழை
கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 21.3 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது. சிறுவாணி அணை அடிவாரம் - 12.8 செ.மீ., சின்கோனா - 12.4 செ.மீ., வால்பாறை - 11.4 செ.மீ., மழைப்பதிவு என மாவட்ட நிர்வாகம் தகவல். நீலகிரி அவலாஞ்சியில் கடந்த 24 மணி நேரத்தில் 35 செ.மீ. மழை கொட்டியுள்ளது. குடகு, வடநாடு, ஹாசன், உடுப்பி, தக்ஷின கன்னட பகுதிகளிலும் கனமழை பதிவாகியுள்ளது - வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான்
சென்னைக்கு தனி பேரிடர் மேலாண்மை ஆணையம்
சென்னை மாநகராட்சிக்கு தனி பேரிடர் மேலாண்மை ஆணையத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசு உத்தரவு. பேரிடர் காலங்களில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைந்து பேரிடர்களை எதிர்கொள்ள புதிய ஏற்பாடு. மாநகராட்சி ஆணையர் தலைமையில், மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர், மாநகராட்சி துணை ஆணையர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
பொறியியல் விண்ணப்பங்கள் அதிகரிப்பு
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பம் கடந்தாண்டை விட நடப்பாண்டில் பெருமளவு அதிகரிக்க வாய்ப்பு. கடந்தாண்டில் 2.53 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், நடப்பாண்டில் தற்போது வரை 2.43 லட்சம் விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளன. பதிவு செய்ய இன்னும் 12 நாட்கள் மீதமுள்ளன
மோடிக்கு உற்சாக வரவேற்பு
குஜராத்தின் வதோதராவில் பிரதமர் நரேந்திர மோடி ரோடு ஷோ. ஆபரேசன் சிந்தூரின் வெற்றியைத் தொடர்ந்து முதல்முறையாக குஜராத் சென்ற பிரதமருக்கு சாலையின் இருமருங்கிலும் நின்று மலர்கள் தூவி வரவேற்ற மக்கள். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று சுமார் 80 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.
கடலில் கவிழ்ந்த கப்பல்- பேரிடர் மீட்புக் குழு விரைவு
கேரளா: கொச்சி அருகே கடலில் கவிழ்ந்த கப்பலை மீட்க அரக்கோணம் பேரிடர் மீட்பு படையில் இருந்து 30 பேர் கொண்ட குழு கொல்லம் சென்றது.கடலில் விழுந்த கண்டெய்னர்கள் கொல்லம் அருகே கரை ஒதுங்கிய நிலையில் மீட்பு பணிக்காக விரைவு
போலி Screen Shot-ஐ காட்டி ஏமாற்றிய பெண்
ராஜஸ்தானில் உள்ள நகைக் கடையில் ரூ.1.50 லட்சத்திற்கு நகை வாங்கிவிட்டு, போலி பணப் பரிவர்த்தனைக்கான Screen Shot-ஐ காட்டி, திருடிச் சென்ற பெண்ணுக்கு வலைவீச்சு!
அவசர அவசரமாக வந்து ஒரு மோதிரம் மற்றும் தாலி செயின் வாங்கியுள்ளார். நம்பிக்கையை பெற முதலில் ரூ.1 அனுப்பி சோதித்துவிட்டு ஏமாற்றியுள்ளார். 2 மணி நேரம் கழித்தும் பணம் வராததால் நகைக் கடை உரிமையாளர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
புதினை சாடிய ட்ரம்ப்
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய இதுவரை இல்லாத அளவிலான மிகப்பெரிய தாக்குதலுக்கு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார். புதினுக்கு பித்துப்பிடித்து உள்ளதாகவும், ரஷ்யாவின் அழிவிற்கு அவர் வழிவகுப்பதாகவும் சாடியுள்ளார். பொதுமக்களை கொல்வது ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
44 ஆண்டுகளுக்குப் பிறகு தாயுடன் இணைந்த மகள்
தென்கொரியா: சியோலில் 1975ல் தொலைந்த தனது மகளை, 44 ஆண்டுகால பாசப் போராட்டத்திற்குப் பிறகு கண்டறிந்து, மீண்டும் அவருடன் இணைந்துள்ளார் தாய் ஹான் டே-சூன். தாய் கடைக்குச் சென்ற சமயத்தில் 6 வயது குழந்தை கடத்தப்பட்டு அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். 2019ல் DNA மூலம் பெற்றோரை கண்டறியும் முயற்சியில் உண்மை அம்பலம். சிறு குழந்தையாக தொலைந்த மகள், வளர்ந்து வந்து நிற்பதை கண்டதும் தாயின் இத்தனை ஆண்டுகால சோகம் கண்ணீராய் கரைந்து போனது.
மும்பை - பஞ்சாப் பலப்பரீட்சை
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. வெற்றி பெறும் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறும் என்பதால், போட்டியின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஜெய்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
சென்னையின் மோசமான சாதனை:
ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக சென்னை அணி லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளது. முன்னதாக கடந்த 2022ம் ஆண்டு 9வது இடத்தை பிடித்ததே சென்னையின் மோசமான செயல்பாடாக இருந்தது.






















