மேலும் அறிய
Advertisement
Todays News Headlines: இன்று நீட் தேர்வு முடிவுகள்.. பயணத்தை தொடங்கும் ராகுல்.. இந்தியா அதிர்ச்சி தோல்வி.. முக்கியச் செய்திகள்..
கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய செய்திகளை தலைப்பு செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- தென் மாவட்டங்களில் முதலமைச்சர் முக ஸ்டாலின் 3 நாள் சுற்றுப்பயணம் : இன்று கன்னியாகுமரி செல்கிறார்.
- பண்ணை பசுமை கடைகளில் ரூ.40க்கு தக்காளில் விற்பனை : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
- எய்ம்ஸ் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் : அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி
- தமிழ்நாட்டில் டீசல், கேஸ் தட்டுப்பாடு : பொதுமக்கள் கடும் அவதி
- தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு; விரைவில் மாநில கல்விக்கொள்கை'' - அமைச்சர் பொன்முடி தகவல்
- நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும் - சென்னை வானிலை மையம்
- கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் நல வாரியம் அமைப்பதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.
- விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுகள் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
- மேட்டூர் அணையின் நீர்வரத்து 55,000 கன அடியில் இருந்து 80,000 கன அடியாக அதிகரிப்பு
இந்தியா :
- டெல்லியில் மதுபான விற்பனை ஊழல் வழக்கு தொடர்பாக 30 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
- இளநிலை மருத்துவ படிப்புக்களுக்கான நீட் நுழைவு தேர்வு முடிவுகள் இன்று நண்பகல் 12 மணிக்கு வெளியாகிறது.
- கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 150 நாட்கள் நடைபயணம் : ராகுல் காந்தி சென்னை வந்தார் - முதல்வர் முக ஸ்டாலின் தேசிய கொடியை வழங்கி இன்று தொடங்கி வைக்கிறார்.
- உயர் வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீடு வழக்கு வரும் 12 ம் தேதி விசாரணை : உச்சநீதிமன்றம் உத்தரவு
- பெங்களூர் வெள்ளம் : களமிறங்கிய தேசிய பேரிடர் மீட்பு படை
- ஆந்திர மாநிலத்தில் உள்ள கேந்திரிய பள்ளி மாணவர்கள் 17 பேருக்கு மூச்சு விடுவதில் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உலகம் :
- வடகொரியாவிடம் ஆயுதம் வாங்க ரஷ்யா திட்டம் : அமெரிக்க வெளியிட்ட அதிர்ச்சிகர தகவல்
- பாகிஸ்தான் மழை வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 1, 325 ஆக அதிகரிப்பு
விளையாட்டு :
- துபாயில் நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.
View this post on Instagram
- இந்தியா மற்றும் உலககோப்பைத் தொடர்களில் ஆடுவதற்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
- இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவிற்கு நடைபெற்ற அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion