மேலும் அறிய
Advertisement
Todays News Headlines: புதுமை பெண் திட்டம்... ஆசிரியர் தினம்..பாகிஸ்தானிடம் வீழ்ந்த இந்தியா..இன்னும் பல செய்திகள்..
கல்லூரி பெண்களுக்கு 1000 ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமை பெண் திட்டத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
தமிழ்நாடு:
- தென் மண்டல கவுன்சில் கூட்டத்தை சிறப்பாக நடத்திய கேரளா முதலமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு.
- கல்லூரி பெண்களுக்கு 1000 ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமை பெண் திட்டத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
- டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சென்னை வந்தடைந்தார். சென்னையில் நடைபெறும் புதுமை பெண் திட்டம் தொடக்க விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க உள்ளார்.
- ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
- கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் திரையுரங்கில் மது போதையில் தகராறு செய்தவர்களை மக்கள் விரட்டி அடித்துள்ளனர்.
- சென்னை கலைவாணர் அரங்கில் திரைப்பட மற்றும் சின்னத்திரை கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.
இந்தியா:
- இந்தியா முழுவதும் இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.
- தேசிய நல்லாசிரியர் விருது பெருபவர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை.
- ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
- கர்நாடகாவில் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட மடாதிபதி இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்.
- ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கேலாட் உடன் சசி தரூர் ஆலோசனை.
- கேரளாவில் இளம் மேயர் ஆர்யா ராஜேந்திரன் இளம் எம்.எல்.ஏவை நேற்று திருமணம் செய்தார்.
- கேரளாவின் வயநாட்டில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சாலை அடித்து செல்லப்பட்டது.
- ஜம்மு-காஷ்மீர் மாநில தேர்தல் தொடர்பாக ஆலோசிக்க அனைத்து கட்சி கூட்டம் இன்று நடைபெறுகிறது.
- சைரஸ் மிஸ்திரி விபத்தில் மரணம் அடைந்தது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தகவல்.
உலகம்:
- மூன்று நாள் அரசு முறை பயணமாக வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா இன்று இந்தியா வர உள்ளார். பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட உள்ளதாக தகவல்.
- கிழக்கு சீனாவில் சக்தி வாய்ந்த சூறாவளி தாக்க உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
- ரஷ்யாவை எதிர்கொள்ள ஜெர்மனியிடம் மீண்டும் ஆயுத உதவியை உக்ரைன் கேட்டுள்ளது.
- ரஷ்யாவில் 6 மலையேற்ற வீரர்கள் உயரத்திலிருந்து விழுந்து பலியாகியுள்ளனர்.
- பிரிட்டனின் புதிய பிரதமர் இன்று இரவு அறிவிக்கப்பட உள்ளார்.
விளையாட்டு:
- ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.
- ஆசிய கோப்பை தொடரின் முதல் சுப்பர் 4 சுற்று போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீரர் ரஃபேல் நடால் நான்காவது சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
மதுரை
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion