மேலும் அறிய
Todays News Headlines: பொங்கல் பண்டிகை ரயில் முன்பதிவு.. ஆசிய கோப்பை வென்ற இலங்கை.. இன்னும் பல செய்திகள்..
பொங்கல் பண்டிக்கான ரயில்வே டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.
![Todays News Headlines: பொங்கல் பண்டிகை ரயில் முன்பதிவு.. ஆசிய கோப்பை வென்ற இலங்கை.. இன்னும் பல செய்திகள்.. Todays News Headlines in Tamil Nadu, India September 12 Top News Today Morning headlines news in Tamil Todays News Headlines: பொங்கல் பண்டிகை ரயில் முன்பதிவு.. ஆசிய கோப்பை வென்ற இலங்கை.. இன்னும் பல செய்திகள்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/12/5365d058284dbbad2d4283fa9bad649c1662942922896224_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தலைப்புச் செய்திகள்
தமிழ்நாடு:
- தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் மின் கட்டணம் உயர்ந்து 2026ஆம் ஆண்டு 52% அதிகமாக இருக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.
- அதிமுக அலுவலகம் தொடர்பாக ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
- பொங்கல் பண்டிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.
- நாட்டில் மிகவும் சிறந்த உயிரினங்கள் பூங்காவாக வண்டலூர் உயிரியல் பூங்கா தேர்வு செய்யப்பட்டுள்ளது.
- மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் மின் கட்டணம் குறைவாக உள்ளதாக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
இந்தியா:
- பிரதமர் மோடி வரும் 15ஆம் தேதி உஸ்பெகிஸ்தானில் நடைபெறும் ஷாங்காங் மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.
- சவுதி அரேபிய நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சருடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு வார்த்தை நடத்தினார்.
- ஓணம் பண்டிகையை ஒட்டி திருச்சூரில் புலிக்கால் நடன நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
- விரைவில் தேசிய கட்சி தொடங்கப்படும் என்று தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் தகவல்.
- ஜம்முக்-காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து கிடைக்காது என்று குலாம் நபி அசாத் தெரிவித்துள்ளார்.
- புனேவில் கனமழையால் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
- கர்நாடகா சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று முதல் தொடக்கம்.
- அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டரில் லடாக் பகுதியில் பறந்து இந்திய ராணுவ தளபதி மனோஜ் பாண்டே ஆய்வு செய்தார்.
- இந்தியாவில் எரிப்பொருள் விலை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
- நடப்பு ஆண்டில் முதல் 8 மாதங்களில் ரயில்வே துறைக்கு சுமார் 95,486 கோடி ரூபாய் வருமானமாக வந்துள்ளதாக தகவல்.
உலகம்:
- ஷாங்காய் மாநாட்டில் பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஸி ஜிங்பிங் ஆகியோர் சந்தித்து பேச உள்ளதாக தகவல்.
- மறைந்த பிரிட்டன் ராணி எலிசபெத்தின் உடல் ஸ்காட்லாந்து தலைநகர் எடின்பரோவுக்கு கொண்டு வரப்பட்டது.
- ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கு வரும் செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
- துபாயின் புர்ஜ் கலிஃபா கட்டிடத்தில் ராணி எலிசபெத்தின் படம் நேற்று திரையிடப்பட்டிருந்தது.
- சிலி நாட்டில் ஏற்பட்ட போராட்டத்தில் மாணவர் அமைப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.
விளையாட்டு:
- ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இலங்கை சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது.
- பாகிஸ்தான் அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி
- இன்று முதல் சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டி சென்னையில் தொடங்குகிறது.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்பெயின் வீரர் கர்லாஸ் அல்கராஸ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
வணிகம்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion