மேலும் அறிய
Advertisement
Todays News Headlines: கரையைகடந்த அசானி புயல்.. இலங்கையில் தொடரும் பதற்றம்.. விலகிய ஜடேஜா இன்னும் பல செய்திகள் !
எல்.ஐ.சி நிறுவனத்தின் ஐபிஓவிற்கு விண்ணப்பித்தவர்களுக்கு இன்று முதல் பங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
தமிழ்நாடு:
- ஏற்றுமதியில் தமிழ்நாடு முதல் மாநிலமாக வர வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- திருச்சி நட்சத்திர விடுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
- பேரறிவாளன் வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
- சென்னையில் சாலை கொண்டிருந்த போது தனியார் கல்லூரி பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டது.
- திருத்தனி முருகன் கோயிலில் தேர் திருவிழா நடைபெற்றது.
- குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகளுக்கு வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவு.
இந்தியா:
- தேச துரோக சட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யும் வரை வழக்குப்பதிவு செய்யக் கூடாது உச்சநீதிமன்றம் உத்தரவு.
- ஆந்திராவில் அசானி புயல் கரையை கடந்தது.
- கொரோனா நோய் தொற்று தொடர்பான சர்வதேச மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
- தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் ஆகியவற்றிற்கான காலை இடைவேளையை குறைக்க பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்.
- கோடை காலங்களில் பள்ளி வகுப்புகளை நண்பகலுக்குள் முடிக்க மத்திய அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
- அசானி புயல் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல்.
- எல்.ஐ.சி பங்குகளுக்கு விண்ணபித்தவர்களுக்கு இன்று முதல் பங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
உலகம்:
- இலங்கையில் இன்னும் ஒரு வாரத்தில் புதிய பிரதமர் நியமிக்கப்படுவார் என்று அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
- இலங்கை நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் என்று தகவல்.
- பாகிஸ்தானில் முன்கூட்டியே தேர்தல் நடைபெறும் தகவல் வெளியாகியுள்ளது.
- ஐரோப்பிய விமான நிலையங்களில் முகக்கவசம் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட உள்ளதாக தகவல்.
- உக்ரைன் -ரஷ்யா படைகள் இடையே மீண்டும் மரியபோல் நகரில் தாக்குதல் நடைபெற்றது.
விளையாட்டு:
- ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை டெல்லி கேபிடல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
- ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
- காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் ஜடேஜா விலகியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கிரிக்கெட்
அரசியல்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion