மேலும் அறிய
Advertisement
Todays News Headlines: உக்ரைன் போர்... உ.பி.யில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு... ஐபிஎல் அட்டவணை வெளியீடு..இன்னும் பல!
Todays News Headlines: கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய செய்திகளை தலைப்பு செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு :
- உக்ரைனில் இருந்து டெல்லி வண்ட 1,011 மாணவர்களுடன் தமிழக அரசின் மீட்புக்குழு சந்திப்பு : முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்.
- சென்னை அமெரிக்க மையத்தில் இன்று முதல் பொதுமக்களுக்கு அனுமதி : துணை தூதர் தகவல்
- மேலூர் : சிகிச்சைப்பலனின்றி 17 வயது சிறுமி உயிரிழப்பு... 8 பேர் கைது என மதுரை எஸ்.பி தகவல்!
- கடலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ.அய்யப்பன் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கம் : பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவு
- உள்ளாட்சியில் எங்காவது சிறு தவறு நடந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் : முதலமைச்சர் முக ஸ்டாலின் எச்சரிக்கை
- கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதில் மயிலாடுதுறை தொடர்ந்து கடைசி இடம்
- தமிழ்நாட்டில் டாஸ்மாக் விலை உயர்கிறது.
இந்தியா :
- உ.பி.யில் இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு : 5 மாநில சட்டமன்ற தேர்தல் இன்றுடன் நிறைவு
- இந்தியாவின் செல்வாக்கள் ஆப்ரேஷன் கங்கா வெற்றி : பிரதமர் மோடி பெருமிதம்
- சுரங்கங்கள் உள்ள மாவட்டங்களில் சரக்கு சேவையை அதிகரிக்க திட்டம் : ரயில்வே அமைச்சகம் புதிய முடிவு
- கேரள தலைநகர் திருவனந்தபுரத்தின் மாநகராட்சி மேயராக இருந்து வரும் ஆர்யா ராஜேந்திரனுக்கும், எம்.எல்.ஏ சச்சின் தேவிற்கும் நிச்சயதார்த்தம்
உலகம் :
- உக்ரைன் மீது மீண்டும் குண்டு மழை : ரஷ்யாவின் முடிவால் மக்கள் வெளியேற முடியாமல் தவிப்பு
- உக்ரைன் என்ற நாடே இருக்காது : ரஷ்ய அதிபர் புடின் பகிரங்க எச்சரிக்கை
- பிரிட்டன், இத்தாலியில் பொதுமக்கள் ரஷ்ய அதிபர் புடினுக்கு எதிராக போராட்டம்
- சீன ராக்கெட்டின் 3 டன் கொண்ட பாகம் நிலவில் மோதியது
- உக்ரைன் : வினிட்ஸ்யா விமானப்படை தளம் அழிப்பு
விளையாட்டு :
- இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தல்
- 435 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் கபில்தேவை முந்தி 2ஆம் இடத்திற்கு முன்னேறினார் அஷ்வின்
- 2022ம் ஆண்டிற்கான டாடா ஐ.பி.எல். போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion