மேலும் அறிய
Advertisement
Todays News Headlines: ராணிப்பேட்டையில் முதல்வர் ஸ்டாலின்... ராஜினாமா செய்த உத்தவ் தாக்கரே..இன்னும் பல செய்திகள் !
ராணிப்பேட்டையில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
தமிழ்நாடு:
- ராணிப்பேட்டையில் கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
- உள்ளாட்சி இடைத் தேர்தல் வேட்பாளர்களுக்கு சின்னம் பெற படிவங்களை அனுப்பக் கோரி ஈபிஎஸ் தரப்பிற்கு ஓபிஎஸ் கடிதம்.
- அதிமுக பொதுக்குழு தொடர்பாக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சார்பில் புதிய மனுத் தாக்கல்.
- சென்னை கோயம்பேட்டில் 6 டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்தியா:
- மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்.
- மகாராஷ்டிரா மாநிலத்தின் எம்.எல்.சி பதவியையும் உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்துள்ளார்.
- மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்க உள்ளதாக தகவல்.
- ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டம் வரும் ஆகஸ்ட் மாதம் மதுரையில் நடைபெற உள்ளது.
- பிஎஸ்.எல்.வி சி53 இன்று மாலை விண்ணில் ஏவப்பட உள்ளது.
- குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா இன்று சென்னை வருகிறார்.
- அமர்நாத் பனி லிங்க யாத்திரை இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது.
- குடியரசுத் துணை தலைவர் தேர்தல் ஆகஸ்ட் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிப்பு.
உலகம்:
- இஸ்ரேலில் இடைக்கால பிரதமராக வெளியுறவு அமைச்சராக இருந்த லபிடன் நியமிக்கப்பட்டுள்ளார்.
- நிலவுக்கு செல்லும் முதல் நானோ செயற்கைக்கோளை நாசா விண்ணில் செலுத்தியது.
- எரிப்பொருள் தட்டுப்பாட்டை கண்டித்து இலங்கையில் சாலையில் மக்கள் போராட்டம்.
- அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சான் ஆண்டனியோ (San Antonio, Texas) பகுதியில் ஒரு கன்டெய்னரில் இருந்து 46 சடலங்கள் மீட்கப்பட்டது.
- அமெரிக்காவில் பெண்களுக்கு கருகலைப்பு உரிமை ரத்து செய்வது தொடர்பாக பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.
விளையாட்டு:
- விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் 3வது சுற்றுக்கு நோவக் ஜோகோவிச் முன்னேறி அசத்தியுள்ளார்.
- இங்கிலாந்து அணிக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா பங்கேற்பது தொடர்பாக இன்று இறுதி முடிவு வெளியாகும்.
- இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தேர்தல் 2024
பொழுதுபோக்கு
கல்வி
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion