மேலும் அறிய
Advertisement
Todays News Headlines: சென்னையில் மழை... நீலகிரியில் பள்ளி விடுமுறை... காமன்வெல்த்தில் தங்கம்... இன்னும் பல!
Todays News Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய செய்திகளை தலைப்பு செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களுக்கு 5ம் தேதி கலந்தாய்வு தொடக்கம்
- திராவிட மாடல் ஆட்சியில் தமிழகத்தில் அனைத்து துறைகளும் முன்னேற்ற பாய்ச்சலில் சென்று கொண்டிருக்கிறது : முதலமைச்சர் முக ஸ்டாலின்
- அன்புச்செழியன் உட்பட 4 சினிமா தயாரிப்பாளர்களுக்கு சொந்தமான 40 இடங்களில் ஐடி ரெய்டு: பல கோடி சொத்து, ரொக்கம் சிக்கியதாக தகவல்
- சென்னை, கோவை மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கு : விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் : லஞ்ச ஒழிப்பு துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
- கன மழை எதிரொலியொட்டி, நீலகிரியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை : பொதுமக்கள் சிரமம்
- தமிழ்நாட்டில் இன்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு, விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தியா:
- நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஒதுக்கீட்டில் உலக வங்கி விதிகளை மிஞ்சும் வகையில் எடப்பாடி துறையில் ஊழல் : உச்ச நீதிமன்றத்தில் ஆர்.எஸ். பாரதி பதில் மனு
- உலகளாவிய பாதிப்பால்தான் விலைவாசி உயஎவு : வங்கியில் பணம் எடுப்பதற்கு, தீவிர சிகிக்கைக்கு வரியில்லை : நிர்மலா சீதாராமன் விளக்கம்
- நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தில் ரெய்டு : சோனியா, ராகுலிடம் விசாரித்த நிலையில் திடீர் நடவடிக்கை
- கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு : இந்தியாவில் இந்த பாதிப்பின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது.
- ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகேயுள்ள தொழிற்சாலை பகுதியில் வாயு கசிவு : 50க்கும் மேற்பட்டோர் உடல்நிலைக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்
உலகம் :
- ஆப்கானிஸ்தானில் பதுங்கி இருந்த அல்கொய்தா தலைவன் ஏவுகணை வீசி கொலை : டிரோன் மூலம் தாக்குதல் நடத்திய அமெரிக்கா தகவல்
- சீன போர் விமானங்களின் மிரட்டலையும் மீறி தைவான் சென்றார் நான்சி பெலோசி : ரேடார் தொடர்புகளை துண்டித்து விளையாட்டு காட்டிய அமெரிக்கா
- மருத்துவர் அய்மன் அல்கொய்தாவின் புதிய தலைவராக பொறுப்பேற்க உள்ளதாக தகவல்
விளையாட்டு :
- வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- ஆசிய கோப்பைக்கான போட்டி அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டது.
- செஸ் ஒலிம்பியாட் பி பிரிவில் விளையாடிய தமிழக வீரர் பிரக்ஞானந்தா தோல்வி; 85-வது நகர்த்தலில் தோல்வியை சந்தித்தார்.
- காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் குழு பிரிவில் மீண்டும் தங்கம் வென்று இந்திய அணி அசத்தியது.
- காமன்வெல்த் லான் பவுல்ஸ் போட்டியில் இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்றது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
திரை விமர்சனம்
அரசியல்
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion