மேலும் அறிய
Advertisement
Todays News Headlines: பி.இ. கலந்தாய்வு தேதி.. ஓணத்திற்கு விடுமுறை.. இன்னும் சில முக்கியச் செய்திகள்!
Todays News Headlines: கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய செய்திகளை தலைப்பு செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு செப்டம்பர் 10ம் தேதி தொடங்கும் : உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தகவல்
View this post on Instagram
- ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை மாவட்டத்திற்கு வரும் 8ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
- வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
- ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பான 608 பக்க அறிக்கை முதலமைச்சர் முக ஸ்டாலினிடம் ஒப்படைப்பு : நாளை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்க முடிவு
- தங்கை குடும்பத்தினர் செல்ல இருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் : சென்னை வாலிபர் கைது
- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ரூ. 194. 65 கோடியில் கட்டிடங்கள், மருத்துவ கருவிகள் : முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார்.
- கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் உடற்கூராய்வுகள் தொடர்பான ஜிப்மர் மருத்துவ குழு அறிக்கை : மாணவியின் பெற்றோரிடம் ஒப்படைப்பு
இந்தியா :
- டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க இது சரியான நேரம் இல்லை : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
- உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவியேற்பு : 74 நாட்கள் மட்டுமே பதவி வகிப்பார்
- கேரளாவில் மாணவிகளின் உள்ளாடைகளைக் கழற்றச்சொன்ன விவகாரம்; செப். 7 மறு தேர்வு தேதி அறிவிப்பு
- நாடு முழுவதும் மத்தியக் கல்வி நிறுவனங்களில் சேர நடத்தப்படும் JEE அட்வான்ஸ்டு தேர்வு இன்று நடைபெற இருக்கிறது.
உலகம் :
- தைவானுடனான அனைத்து உறவுகளையும் முடித்துக் கொள்ளுமாறு அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை
- ”நான் ரொம்பவே ஆபத்தானவன்” மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்
- அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி, 3 பேர் தப்பியோட்டம்
விளையாட்டு :
- ஆசிய கோப்பையின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி அபார வெற்றி
- கிரிக்கெட் உலகின் வளர்ந்து வரும் அணியான ஆப்கானிஸ்தான் அணி நேற்று இலங்கைக்கு எதிராக தனது 100வது டி20 போட்டியில் களமிறங்கியது.
- உலக ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டித்தொடரில் இந்திய வீராங்கனை லிந்தோய் சனம்பாம் தங்கம் வென்று வரலாறு படைப்பு
- உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் ஆடவர் இரட்டையர் அரையிறுதில் சத்விக்-சிராக் தோல்வி
- ஆசியகோப்பை தொடர் : இந்தியா - பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
விழுப்புரம்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion