Todays News Headlines: தமிழகத்தில் முழு ஊரடங்கு, கோரக்பூரில் யோகி ஆதித்யநாத் போட்டி இன்னும் பல..
டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அணிக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு:
கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் இன்று முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுகிறது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 23,989 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது
முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் சொந்த ஊரான கேம்பர்ளி(இங்கிலாந்து) நகரில் தமிழக அரசு சார்பில் சிலை நிறுவப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.
தமிழக அரசின் நடப்பாண்டிற்கான திருவள்ளுவர் விருது பெங்களுருவில் வசிக்கும் மீனாட்சி சுந்தரத்திற்கும், காமராஜர் விருது குமரி அனந்தனுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஊழியர்களுக்கு வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து வருகின்ற 31ம் தேதி வரை உயிரியல் பூங்கா முழுமையாக மூடப்படும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 8,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்தியா:
கடந்த 24 மணி நேரத்தில் 2,68,833பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 16.66 சதவீதம் ஆகும்
உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பிஜேபியும், பி.எஸ்.பியும் வெளியிட்டுள்ளன. கோரக்பூர் தொகுதியில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் போட்டியிடுகிறார். அதேபோல், அம்மாநில துணை முதலமைச்சர் கேசவ பிரசாத் மௌரியா பிரயாக்ராஜின் சிரத் தொகுதியில் போட்டியிடுகிறார்.
சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக ஜனவரி 22ம் தேதி வரை பேரணி, பாதயாத்திரை, ஊர்வலத்துக்கு அனுமதி இல்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
மேற்குவங்கத்தில் ஏழு நகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தலை அடுத்தமாதம் 12-ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதென, அம்மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
2022-ம் ஆண்டுக்கான முதுநிலை நீட் தேர்வு ( NEET - PG) வரும் மார்ச் மாதம் நடைபெறும் என்று தேசியத் தேர்வுகள் வாரியம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்வுக்கு நேற்று (ஜனவரி 15) முதல் விண்ணப்பிக்கலாம்.
விளையாட்டு:
டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அணிக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.
இந்தியா ஓபன் பேட்மிண்டன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் லக்ஷயா சென்னும், இரட்டையர் பிரிவில் சாத்விக் சாய்ராஜ் - சிராஜ் ஷெட்டி இணையும் இறுதி ஆட்டத்திற்கு முன்னேறியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்