மேலும் அறிய
Advertisement
Headlines Today Tamil: பிறந்தது புத்தாண்டு.. முதலமைச்சர் வாழ்த்து.. அச்சுறுத்தும் கனமழை.. இன்னும் பல!
தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற, பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- தமிழ்நாடு முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலம்: வாழ்த்துகளை பரிமாறி மக்கள் மகிழ்ச்சி
- புதிய கட்டுப்பாடுகளுடன் ஜன.10 தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு : 1 முதல் 8 ம் வகுப்பு வரையிலான நேரடி வகுப்புகளுக்கு தடை
- தமிழ்நாடு முழுவதும் 208 உதவி ஆய்வாளர்கள் ஆய்வாளர்களாக பதவி உயர்வு :டிஜிபி உத்தரவு
- சென்னையில் அடுத்த மழைக்காலம் வருவதற்குள் தண்ணீர் தேங்காத நிலைக்கு மாற்றப்படும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
- தமிழ்நாட்டில் இன்றும் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
- ஒருநாள் மழைக்கு மீண்டும் மிதக்கும் சென்னை, என்ன சாதித்தது 8 மாதங்களில் இந்த திமுக அரசு? என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
- மதுரையில் ஜனவரி 12-இல் பொங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் பிரதமர் மோடி பங்கேற்று பொங்கல் கொண்டாட உள்ளதாகவும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தகவல்
- அரசு மீதான மக்களின் நம்பிக்கை புத்தாண்டில் பொலிவு பெறும் : முதலமைச்சர் முக ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து
இந்தியா:
- ஜவுளிகளுக்கு 12 சதவீத வரி விதிக்கும் முடிவை நிறுத்தியது மத்திய அரசு : புதிய பரிந்துரை அளிக்க உத்தரவு
- மகாராஷ்டிரா, ராஜஸ்தானில் ஒமிக்ரான் தொற்றால் 2 பேர் பலி : இந்தியாவிலும் தொடங்கியது பலி எண்ணிக்கை
- கேரளாவில் ஒமிக்ரான் பாதிப்பு 100-ஐ கடந்தது.
- இந்திய எல்லைக்கு உட்பட்ட அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 15 இடங்களின் பெயர்களை சீனா மாற்றியுள்ளதாக எழுந்த புகார் குறித்த மத்திய அரசின் எதிர்வினையைக் கிண்டல் செய்துள்ளார் மாநிலங்களவை எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி.
- கர்நாடக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவை பின்னுக்கு தள்ளி காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
உலகம்:
- அமெரிக்காவில் கடந்த வாரம் மட்டும் கொரோனாவால் 2 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- உலகம் முழுவதும் புத்தாண்டு பிறந்தது : பொதுமக்கள் உற்சாக வரவேற்பு
விளையாட்டு:
- 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கையை வென்று இந்தியா சாம்பியன்
- 2021 டி20 கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய வீராங்கனைக்கான விருதிற்கு இந்தியாவின் ஸ்மிரிதி மந்தானா, இங்கிலாந்தின் டேமி பியுமோண்ட், நாட் சிவர், அயர்லாந்தின் கேபி ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
- கிரிக்கெட் ஆஸ்திரேலியா 2021 ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியை அறிவித்துள்ளது. இதில் அஸ்வின், ரோகித் சர்மா உள்ளிட்ட 4 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
அரசியல்
கல்வி
ஆட்டோ
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion