Headlines Today Tamil: அம்மா உணவகம் மூடப்படாது...டாஸ்மாக் மூடல்... 2 பேர் என்கவுன்டர்..இன்றைய டாப் நியூஸ்...!
Headlines Today in Tamil, 07 Jan: காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கியச் செய்திகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
தமிழ்நாடு:
* அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அம்மா உணவகம் மூடப்படாது - முதல்வர் ஸ்டாலின் உறுதி
* தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
* தி.மு.க.வினரே சிறிய குற்றத்தில் ஈடுபட்டாலும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
* செங்கல்பட்டில் நேற்று இருவர் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, இன்று இருவர் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
* தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகள் அனைத்தும் இந்த மாதத்தில் 3 நாட்கள் செயல்படாது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
* ஜனவரி 9ஆம் தேதி நடைபெற இருந்த டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
* சென்னையில் ஒரேநாளில் முகக்கவசம் அணியாத 5,223 பேரிடம் ரூ.10.46 லட்சம் அபராதம் வசூல் - காவல்துறை
* சென்னை குரோம்பேட்டை சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்கள் 30 பேருக்கு கொரோனா பாதிப்பு.
இந்தியா:
* வெளிநாடுகளில் இருந்து விமானங்களில் வரும் அனைவரும் 7 நாட்கள் வீட்டுத் தனிமையில் கட்டாயம் இருக்க வேண்டும். 8ஆவது நாள் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் - மத்திய அரசு
* இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த 150 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தி சாதனை - பிரதமர் மோடி நன்றி
* பிரதமர் மோடியின் புதுச்சேரி பயணம் ரத்து - முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு
* மருத்துவப் படிப்புகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டிற்கு உச்சநீதிமன்றம் அனுமதி
உலகம்:
* பாகிஸ்தான் நாட்டு உச்சநீதிமன்றத்திற்கு முதன்முறையாக பெண் ஒருவர் நீதிபதியாக விரைவில் நியமிக்கப்பட உள்ளார்.
* ஒமிக்ரான் வைரஸ் சாதாரணமானது அல்ல என்று உலக சுகாதார அமைப்பு தகவல்.
விளையாட்டு:
* மூன்றாவது டெஸ்டில் கோலி இருப்பார் - அப்டேட் கொடுத்த டிராவிட்
* ஆஷஸ் டெஸ்டில் பென் ஸ்டோக்ஸ் எடுத்த ரிவ்யூ வீடியோ - கிரிக்கெட் விதியை கேள்வி எழுப்பும் சச்சின் டெண்டுல்கர்
* சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான புதிய விதிகளை ஐசிசி வெளியிட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்