மேலும் அறிய

Today’s headlines | சிலிண்டர் விலை உயர்வு... நீதிமன்றம் சென்ற லக்கிம்பூர் வன்முறை - இன்றைய முக்கியச் செய்திகள் சில!

தொடர்ந்து உயரும் சிலிண்டர் விலை முதல் பாலியல் வன்கொடுமை வழக்கில் யோகா ஆசிரியர் கைது வரை... இன்றைய டாப் நியூஸ் என்னவென பார்க்கலாம்.

விறுவிறுப்பாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல்

தமிழகத்தின் காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடக்க உள்ளது.  இந்நிலையில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை  7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. 

3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக நீலகிரி, கிருஷ்ணகிரி, ஈரோடு  மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

போக்குக்காட்டும் புலி

நீலகிரி மாவட்டம் மசினகுடியில் 12வது நாளாக டி23 புலி போக்குக்காட்டி வருகிறது. ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை

சூதாட்டம், பந்தயம் அல்லது பணத்துக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய ஆன்லைன் விளையாட்டுகளுக்கு கர்நாடக அரசு தடை விதித்துள்ளது.
ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு

ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ்

 இந்திய ரயில்வே துறையில் பணியாற்றும் அதிகாரிகள் அல்லாத  ஊழியர்களுக்கு 2020-21 நிதியாண்டுக்கு 78 நாள் சம்பளத்தைப் போனஸ் ஆக அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது மத்திய அரசு. போனஸ் வழங்குவதன் மூலம் 11.56 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பயன்பெறுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புலம்பெயர் தமிழர் நல வாரியம்-  முதலமைச்சர் அறிவிப்பு

வெளிநாடு வாழ் தமிழர்களின நலன் காக்க "புலம்பெயர் தமிழர் நல வாரியம்" என்ற புதிய வாரியம் தோற்றுவிக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

சமச்சீரற்ற உடல்உறுப்பு வினையூக்கிகளை கண்டறிந்ததற்காக இரண்டு பேருக்கு இந்த ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியைச் சேர்ந்த பெஞ்சமின் லிஸ்ட், பிரிட்டனைச் சேர்ந்த டேவிட் மேக்மில்லன் ஆகியோருக்கு நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட உள்ளது.

தொழிலதிபர் கடத்தல் சினிமா பாணியில் சேசிங்...

சென்னையில் 5 கோடி ரூபாய் பணம் கேட்டு ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளரை கடத்தப்பட்டார். சினிமா பாணியில் கும்பலை சேசிங் செய்த போலீசார் கடத்தல்காரர்களை அதிரடியாக கைது செய்தனர். 

ராகுலுக்கு லக்கிம்பூர் செல்ல அனுமதி

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது கார் ஏற்றிக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக விவசாயிகளின் குடும்பங்களைச் சந்திக்க சென்ற ராகுல் காந்திக்கு  உ.பி அரசு அனுமதி மறுத்தது. ஆனாலும் தன்னை யாராலும் தடுக்க முடியாது என ராகுல்காந்தி சென்றார். இதனையடுத்து ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சத்தீஸ்கர் மற்றும் பஞ்சாப் மாநில முதல்வர்களுக்கு லக்கிம்பூர் செல்ல உத்தரபிரதேச பாஜக அரசு அனுமதி வழங்கியுள்ளது

அதிகரிக்கும் ரிஜிஸ்டிரேஷனை ரினீவல் கட்டணம்

15 வருடங்கள் பழைய கார்களின் ரிஜிஸ்டிரேஷனை ரினீவல் செய்ய வேண்டும் என்றால் இனி 8 மடங்கு கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டும்.  இதே போல 15 வருடங்கள் பழைய பைக்குகளின் ரிஜிஸ்டிரேஷன் ரினீவல் கட்டணம் 300 ரூபாயில் இருந்து 1000 ரூபாயாக அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பாலியல் வன்கொடுமை:யோகா பயிற்சியாளர் கைது

சென்னையில் இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் யோகா பயிற்சியாளர் யோகராஜ் கைது செய்யப்பட்டார். மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததோடு வீடியோ எடுத்து மிரட்டுவதாக யோக பயிற்சியாளர் மீது இளம் பெண் புகார் அளித்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

நாடெங்கும் ஜியோ டவுன்

இந்தியாவில் மிகப்பெரிய டெலிகாம் சேவை நிறுவனமாக இருக்கும் ரிலையன்ஸ் ஜியோ நாட்டின் பல பகுதிகளில் இயங்கவில்லை. இதனையடுத்து டிவிட்டரில் #JioDown எனும் ஹேஷ்டேக் ட்ரெண்டானது. 

நீட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்பு பழைய பாடத்திட்டத்தின் படி நடைபெறும்

நடப்பாண்டு நீட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்பு பழைய பாடத்திட்டத்தின் படியே நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. முன்னதாக உச்சநீதிமன்றம் கண்டித்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தொடர்ந்து உயரும் சிலிண்டர் விலை

வீட்டு உபயோக மற்றும் வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை தொடர்ந்து  உயர்ந்து வருகிறது. தற்போது 15 ரூபாய் உயர்ந்து, 915 ரூபாய் 50 காசுக்கு விற்பனையாகிறது. ஒரே ஆண்டில் இதுவரை 300 ரூபாய்க்கு வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. 

லக்கிம்பூர் வன்முறை - தானே விசாரணைக்கு எடுத்தது உச்சநீதிமன்றம்

லக்கிம்பூர் வன்முறை - தானே விசாரணைக்கு எடுத்தது உச்சநீதிமன்றம் நாளை தலைமை நீதிபதி அமர்வில் விசாரணை

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ambedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget