Today Headlines: வடிவேலுவுக்கு ஒமிக்ரானா? பைனலில் தமிழ்நாடு... புத்தாண்டிற்கு தடை.. இன்னும் பல!
தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
* S Gene ட்ராப் உறுதியானது.. வடிவேலுவுக்கு ஒமிக்ரான் தொற்று?
* திருத்தப்பட்ட ஓராண்டு தேர்வு கால அட்டவணை வெளியீடு : குரூப் 4 பதவிக்கு மட்டும் 5,255 காலி பணியிடங்கள்
* ஒமிக்ரான் தொற்றின் பரவலை தடுக்க கட்டாயம் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் : முதலமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கை
* டோக்கன் பதிவு செய்திருந்தாலும் பத்திரப்பதிவில் 70 வயது மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் : அமைச்சர் மூர்த்தி அறிவிப்பு
* மதுரை அருகே கற்காலத்தை சேர்ந்த பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு
* ‛எங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் உத்தரவிடக்கூடாது’ -ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் வழக்கில் தமிழக அரசு கேவியட் மனு!
* ஆயுள் தண்டனைக் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதுக்குறித்த அறிவிப்பு தமிழக வரலாற்றில் ஒரு மைல் கல்.. தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள்.
இந்தியா:
* கேரளாவில் மேலும் 8 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி
* சிறுமியை 4 ஆண்டுகளுக்காக வன்கொடுமை செய்த வாலிபர் : 50 ஆண்டுகள் கடுங்காவல் விதித்து கேரள நீதிமன்றம் உத்தரவு
* ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த மகாராஷ்டிராவில் புதிய கட்டுப்பாடுகளை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
* ஒமிக்ரான் அச்சுறுத்தல்: ‛கட்சி ஊர்வலங்கள், பிரச்சாரத்தை நிறுத்துங்க.. தேர்தலை ஒத்திவைங்க’ -உயர்நீதிமன்றம்!
* கரண்ட் பில் கட்டாமல் ‛டிமிக்கி’- முதலிடம் பிடித்த வருவாய்த்துறை அமைச்சர்!
* கான்பூரில் 4 லாரிகள், 2 அலமாறிகள் நிறையே கட்டுக்கட்டாக 150 கோடிக்கு மேல் பணம் : தொழிலதிபர் வீட்டில் ஐடி ரெய்டு..
உலகம்:
* ஒமிக்ரான் தொற்று பரவலால் லண்டன், பாரிஸில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை
* வங்கதேசத்தில் படகில் பயங்கர தீ விபத்து.. 40 பயணிகள் உயிரிழந்த சோகம்..
* லண்டன் பகுதியில் அமைந்துள்ள பூங்கா ஒன்றில் 35 வயதுப்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை .. 13 வயது சிறுவன் கைது..
* ஆல்பா, பீட்டா, காமா மற்றும் டெல்டா வகையை விட ஒமிக்ரான் பாதிப்பின் தீவிரத்தன்மை குறைவாக உள்ளது - இங்கிலாந்து சுகாதார முகமை
விளையாட்டு:
* விஜய்ஹசாரே தொடரின் அரையிறுதிப் போட்டியில் செளராஷ்டிரா அணியை வீழ்த்தி தமிழ்நாடு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
* “அனைத்து நல்ல விஷயங்களுக்கும் முடிவு வரும்.." - ஓய்வை அறிவித்தார் ஹர்பஜன் சிங்
* ICC Test Ranking: சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்: முதலிடத்தை பிடித்த மார்னஸ் லபுசானே..
*Ravi Shastri on Ashwin: ‛என்னால் அவர் வருத்தப்பட்டிருந்தால் எனக்கு மகிழ்ச்சியே’ -அஷ்வினை அட்டாக் செய்த ரவி சாஸ்திரி!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்