Headlines Today Tamil: ஜல்லிக்கட்டுக்கு தடை..? வடிவேலுவுக்கு ஒமிக்ரானா..? பிரபல இந்திய வீரர் ஓய்வு...இன்றைய டாப் நியூஸ்..!
Headlines Today in Tamil, 24 Dec: காலை முதல் மாலை 6 மணிவரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
* திமுகவினரின் வன்முறையைக் கண்டித்த தொல். திருமாவளவனுக்கு நன்றி - சீமான்
* ஒமிக்ரானை காரணம் காட்டி ஜல்லிக்கட்டுக்கு தடை கேட்கும் பீட்டா!
* ‛எங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் உத்தரவிடக்கூடாது’ -ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் வழக்கில் தமிழக அரசு கேவியட் மனு!
* ஆயுள் தண்டனைக் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதுக்குறித்த அறிவிப்பு தமிழக வரலாற்றில் ஒரு மைல் கல் என்று புகழாரம் சூட்டிய பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், தமிழக முதல்வருக்கு கடிதத்தின் வாயிலாக நன்றி கூறினார்.
* மதுரை அருகே கற்காலத்தை சேர்ந்த பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு
* அதிமுக பொதுச்செயலாளர் பதவியை துறந்தாரா சசிகலா? புதிய அறிக்கையால் பரபரப்பு!
* சிலம்பம் சுற்றிய மருத்துவர் ராமதாஸ் - வன்னியர்களுக்காக இன்னொரு ராமதாஸ் பிறக்கப்போவதில்லை என பேச்சு
* S Gene ட்ராப் உறுதியானது.. வடிவேலுவுக்கு ஒமிக்ரான் தொற்று?
இந்தியா:
* ஒமிக்ரான் அச்சுறுத்தல்: ‛கட்சி ஊர்வலங்கள், பிரச்சாரத்தை நிறுத்துங்க.. தேர்தலை ஒத்திவைங்க’ -உயர்நீதிமன்றம்!
* கரண்ட் பில் கட்டாமல் ‛டிமிக்கி’- முதலிடம் பிடித்த வருவாய்த்துறை அமைச்சர்!
* கான்பூரில் 4 லாரிகள், 2 அலமாறிகள் நிறையே கட்டுக்கட்டாக 150 கோடிக்கு மேல் பணம் : தொழிலதிபர் வீட்டில் ஐடி ரெய்டு..
* 400 வாய்தாக்கள்; 35 ஆண்டுகால சட்டப் போராட்டத்தில் வெற்றி பெற்ற 85 வயது விவசாயி..
* கேம்பஸ் தேர்வில் 9000 வேலைகளை அள்ளிய ஐஐடி மாணவர்கள்.. 160 பேருக்கு ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கும் மேல் ஊதியம்
உலகம்:
* வங்கதேசத்தில் ஆற்றில் சென்ற படகு திடீரென தீப்பிடித்ததில் 40 பயணிகள் உயிரிழந்தனர்.
* ஒமிக்ரான் தொற்று பரவலால் லண்டன், பாரிஸில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
* ஒமிக்ரான் பரவலை தடுக்க ஸ்பெயினில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு:
* “அனைத்து நல்ல விஷயங்களுக்கும் முடிவு வரும்.." - ஓய்வை அறிவித்தார் ஹர்பஜன் சிங்
* தேசிய பாரா தடகள போட்டியில் 3 தங்கப்பதக்களை வென்று மாற்றுத்திறனாளி இளைஞர் சாதனை
* விஜய்ஹசாரே தொடரின் அரையிறுதிப் போட்டியில் செளராஷ்டிரா அணியை வீழ்த்தி தமிழ்நாடு இறுதிக்கு முன்னேறியது.
* 12 ஆண்டுகளுக்கு முன்... விராட் கோலியின் சத வேட்டை தொடங்கிய நாள் இன்று ! மெமரீஸ்..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்