மேலும் அறிய
Advertisement
Headlines Today : இன்று வெளியாகிறது 10,12-ஆம் வகுப்பு முடிவுகள்..! அக்னிபத் அப்டேட்ஸ்.. இன்னும் பல முக்கியச் செய்திகள்
Today Headlines : கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு :
- சென்னையில் நேற்று இரவு விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழை
- சென்னையின் புறநகர் பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கியது
- திடீரென பெய்த கனமழையால் சென்னையின் பல இடங்களில் மின்தடை
- தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்வதற்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
- 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
- பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு : இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
- சிதம்பரம் நடராஜர் கோயில் குறித்து இன்றும் நாளையும் அறநிலையத்துறை கருத்து கேட்பு
- அ.தி.மு.க.வில் ஓயாத ஒற்றைத் தலைமை சர்ச்சையில் தொண்டர்கள் வருத்தம்
- எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் வீட்டிற்கு மாறி, மாறிச் சென்ற நிர்வாகிகள்
- எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளித்த முன்னாள் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், கடம்பூர் ராஜூ
- கடலூர் வெள்ளிக்கடற்கரையில் கோடைவிழா கொண்டாட்டம் – ஆயிரக்கணக்கில் குவிந்த சுற்றுலா பயணிகள்
இந்தியா :
- செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஜோதி ஓட்டத்தை தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி
- அக்னிபத் திட்டம் திரும்பப் பெற மாட்டாது : வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு பணி வழங்கப்படமாட்டாது – மத்திய அரசு திட்டவட்டம்
- அக்னிபத் திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர் ராணுவத்தில் சேர்க்கப்படுவார்கள் : பெண்களுக்கும் வாய்ப்புகள் வழங்கப்படும் – ராணுவம் தகவல்
- அக்னிபத் திட்டத்திற்கு எதிராக தவறான தகவல் பரப்பியதாக 35 வாட்ஸ் அப் குழுக்கள் முடக்கம்
- அக்னிபத் திட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் சத்தியாகிரக போராட்டம்
- நேஷனல் ஹெரால்ட் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு இன்று மீண்டும் ஆஜராகிறார் ராகுல்காந்தி
- அசாம் மாநிலத்தில் கனமழை மற்றும் வெள்ளத்தினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 71` ஆக அதிகரிப்பு
- பீகாரில் மின்னல் தாக்கி ஒரே நாளில் 17 பேர் உயிரிழப்பு
உலகம் :
- சீனாவின் தெற்குப்பகுதியில் 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெய்த கனமழையால் வெள்ளம்
- இலங்கையில் எரிபொருள் வாங்க மோதல் ஏற்படுவதால் பொதுமக்கள் வரிசையில் நிற்க வேண்டாம் – அமைச்சர் வேண்டுகோள்
- இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக 2 வாரங்களுக்கு பள்ளிகள் மூடல்
விளையாட்டு :
- இந்தியா – தென்னாப்பிரிக்க அணிகள் மோதிய கடைசி டி20 போட்டி மழையால் ரத்து
- இந்தியா – தென்னாப்பிரிக்க தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
அரசியல்
உலகம்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion