மேலும் அறிய
Advertisement
Today Headlines 6 June 2023: எங்கே? எப்போது? என்ன நடந்தது? முந்தைய நாளின் முழுவிவரம்.. காலை 7 மணி தலைப்பு செய்திகள்..!
Headlines News: கடந்த 24 மணிநேரத்தில் நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.
தமிழ்நாடு:
- மேட்டூர் அணை 12ம் தேதி திறக்க உள்ள நிலையில் டெல்டா மாவட்டங்களில் 9ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
- தலை நிமிர்ந்து நிற்கும் தமிழ்நாட்டின் வளர்ச்சி ஆளுநருக்கு மட்டும் தெரியவில்லை; தினந்தோறும் மக்களை குழப்பும் வேலையை செய்கிறார் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
- சொத்துவரி, கிருமிநாசினி, குடிநீர், தொழில் வரி புத்தகங்கள் கொள்முதலில் ரூ.1.31 கோடி முறைகேடு - மலர்விழி ஐஏஎஸ் வீட்டில் லஞ்சஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை
- தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை பெய்யும்; மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் - வானிலை மையம் எச்சரிக்கை
- மத்திய அரசு 15% இடத்திற்கு கலந்தாய்வு அறிவித்ததும் தமிழ்நாட்டில் மருத்துவ கலந்தாய்வு தேதி அறிவிப்பு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
- போக்குவரத்து துறை செயலாளர் பணீந்திர ரெட்டிக்கு கூடுதல் பொறுப்பு; ஐஏஎஸ் அதிகாரிகள் 7 பேர் மாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு
- கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழாவை முன்னிட்டு வடசென்னையில் இன்று பிரமாண்ட பொதுக்கூட்டம்
- சென்னை அம்பத்தூரில் உள்ள ஆவின் நிறுவனத்தில் சுமார் 30-க்கும் மேற்பட்ட சிறார் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
- தமிழ்நாட்டில் பாஜகவை ஏற்பவர்கள் இல்லை என்பதால் ஆளுநர் மூலமாக கொண்டு வருவதற்கு முயற்சியை பாஜக மேற்கொண்டு வருகிறது - அமைச்சர் பொன்முடி
இந்தியா:
- பிரதமரின் ஆட்சிக்காலத்தில், பெண்களுக்கு ரூ.27 கோடி முத்ரா கடன் வழங்கப்பட்டுள்ளது: அமித்ஷா பேச்சு
- "தேர்தல் நமது உரிமை; அதற்காக பிச்சை எடுக்க மாட்டோம்" - ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா
- சச்சின் பைலட், பாஜகவில் இணைவாரா என்ற கேள்விகள் எழுந்த நிலையில், அவர் தனது ஆதரவாளர்களுடன் காங்கிரஸில் இருந்து வெளியேறி புதிதாக கட்சி தொடங்கும் வேலைகளில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
- ஒடிசா ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்ததாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டார்.
- கர்நாடகாவில் வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
- ஒடிசா ரயில் விபத்து ; சிபிஐ விசாரணை துவங்கியது - 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
- மணிப்பூர் மாநில கலவரம் மூலம் மிகப்பெரிய இன அழிப்பை பாஜக அரசு நடத்தி வருகிறது - முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் பரபரப்பு குற்றச்சாட்டு
உலகம்:
- சூரினாம் நாட்டில் வாழும் இந்தியர்கள் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சந்தித்து பேசினார்.
- ஒரு மாத காலமாக சிறையிலிருந்த பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் விடுதலை செய்யப்பட்டார்.
- நியூசிலாந்தின் 2-வது மிக உயர்ந்த விருதான டேம் கிராண்ட் கம்பானியன் ஜெசிந்தா ஆர்டெர்னுக்கு வழங்கப்பட்டுள்ளது.
- டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவை நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால், அது ரஷியாவுக்கு திருப்பி விடப்பட்டது.
- உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள காக்கோவ்க அணை மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு:
- இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இன்று தொடக்கம்.
- ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி விலக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர்: ரஷ்ய வீரர் கரன் ஹெச்நவ்வை வீழ்த்தி ஜோகோவிச் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
ஆட்டோ
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion