Breaking LIVE: எஸ்.பி வேலுமணி வீட்டுக்கு முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் வருகை
Breaking Live Blog : இன்று நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே விரைவுச்செய்திகளாக காணலாம்.
LIVE
Background
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சோதனை நடத்தி வருகிறது. கோவை மைல்கல் பகுதியில் உள்ள வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்துகின்றனர்.
சோதனை நடத்துவதற்கு முன்பாக வீட்டிற்கு வந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் எஸ்.பி.வேலுமணியின் ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை உள்ளே விடாமல் தகராறில் ஈடுபட்டனர். அதிகாரிகள் வந்த தகவல அறிந்து, வேலுமணியின் வீட்டில் இருந்து இரண்டு பேர் சிசிடிவி கேமராவை தூக்கிச் சென்றதாகவும் அதிகாரிகள் கூறியதால், அவர்களிடம் தொண்டர்கள் ஆக்ரோஷமாக யார் ஓடினார்கள் கேள்வி எழுப்ப, உடனே
எஸ்.பி.வேலுமணி வீடு உள்ளிட்ட 58 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். வேலுமணியின் உதவியாளர் சந்தோஷின் வீடு உள்ளிட்ட கோவை மாவட்டத்தில் 41 இடங்களிலும், கோவை, சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் வேலுமணி தொடர்புடைய நபர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும், ரூ.58.23 கோடிக்கு கூடுதலாகவும், வருமானத்தை விட 3,928% கூடுதலாகவும் சொத்து சேர்த்ததாக எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த முறை நடந்த சோதனையில் ரூ.13 லட்சம் ரொக்கம், ரூ.2 கோடி வைப்புத்தொகை, டெண்டர் ஆவணங்கள் கண்டறியப்பட்டன.
எஸ்.பி வேலுமணி வீட்டில் சோதனை நிறைவு
கோவை சுகுணாபுரம் பகுதியில் உள்ள வேலுமணி வீட்டில் 13 மணி நேரத்திற்கு மேலாக நடந்த இலஞ்ச ஒழிப்பு துறை சோதனை நிறைவு. அதிகாரிகள் வெளியே செல்ல விடாமல் அதிமுக தொண்டர்கள் தடுத்து நிறுத்தியதால் காவல்துறை மற்றும் அதிமுக தொண்டர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது
எஸ்.பி வேலுமணி வீட்டுக்கு முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் வருகை
எஸ்.பி வேலுமணி வீட்டுக்கு முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் வருகை
ஹிஜாப் தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் - கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை
ஹிஜாப் தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் - கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை
உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்களுக்கு எதிர்காலம் என்ன? அவர்கள் படிப்புக்கான பொறுப்பை யார் ஏற்பது? - திருச்சி சிவா எம்.பி
உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்களுக்கு எதிர்காலம் என்ன? அவர்கள் படிப்புக்கான பொறுப்பை யார் ஏற்பது? - திருச்சி சிவா எம்.பி
உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்களை மீட்பதற்காக, அங்கு பிரத்யேக ரயில்கள் இயக்கப்பட்டன - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்களை மீட்பதற்காக, அங்கு பிரத்யேக ரயில்கள் இயக்கப்பட்டன - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்