மேலும் அறிய
Advertisement
Headlines: "ஒரு நிமிடத்தில் இந்த நாள்..." இன்று நடந்தது என்னென்ன தெரியுமா..?
இன்றைய நாள் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.
தமிழ்நாடு:
- புகழ்பெற்ற புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் யானையின் இறுதி ஊர்வலம்
- மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமியின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
- மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது
- எம்.ஜி.ஆர். என் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தார் – முதல்வர் மு.க.ஸ்டாலின்
- எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் அதிக காலங்களில் பணியாற்றியுள்ளார்; எம்.ஜி.ஆர். படங்களை முதலில் பார்க்கும் நபராக இருந்துள்ளேன் – முதல்வர் மு.க.ஸ்டாலின்
- அம்மா உணவக திட்டத்தை லாப நோக்குடன் பார்க்கக்கூடாது – எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
- தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு படுபாதாளத்திற்கு சென்றுவிட்டது – முதல்வர் மு.க.ஸ்டாலின்
- திருவாரூர் மாவட்டத்திற்கு கூடுதலாக 1,400 மெட்ரிக் டன் யூரியா வந்து சேர்ந்துள்ளது
- அரசு திட்டங்களை நிறைவேற்ற வேண்டுமெனில் நிலங்களை கையகப்படுத்திதான் ஆக வேண்டும் – அமைச்சர் எ.வ.வேலு
- இலங்கையில் இருந்து படகு மூலமாக சட்டவிரோதமாக தமிழ்நாட்டிற்குள் வந்த மேற்குவங்க இளைஞர் கைது
- பிரதமரின் பாதுகாப்பில் எந்த குளறுபடியும் இல்லை – டி.ஜி.பி. சைலேந்திரபாபு
- அம்மா உணவகத்தை மூடக்கூடாது என்பது முதலமைச்சரின் திடமான முடிவு – சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
- வரும் 5-ந் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
- கோகுல்ராஜ் கொலை வழக்கில் நீதிமன்றத்திற்கு தவறான தகவல் அளித்த சுவாதி மீது அவமதிப்பு நடவடிக்கை
- பழவேற்காடு ஏரியில் மீன்பிடிக்க அனுமதி கோரி போராட்டம் நடத்திய கூனங்குப்பம் கிராம மீனவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் – பேச்சுவார்த்தைக்கு பின் வாபஸ்
இந்தியா:
- குஜராத்தில் நாளை முதற்கட்ட சட்டப்பேரவை தேர்தல்
- குஜராத் முதற்கட்ட வாக்குப்பதிவிற்காக தீவிர கண்காணிப்பு
- கேரளாவில் மலப்புரம் மாவட்டத்தில் 160 பேருக்கு தட்டம்மை பாதிப்பு
- சபரிமலையில் பக்தர்களை உற்சாகப்படுத்த டிரம்ஸ் சிவமணி கச்சேரி சிறப்பாக நடைபெற்றது
உலகம்:
- ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் 16 பேர் உயிரிழப்பு
விளையாட்டு:
- நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.
- கடைசி போட்டி ரத்தானதால் ஒருநாள் கிரிக்கெட் போட்டித்தொடரை நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
க்ரைம்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion