மேலும் அறிய

7 AM Headlines: துருக்கி நிலநடுக்கம் முதல் ஈரோடு இடைத்தேர்தல் வரை.. நேற்றைய நாள் ஒரு பார்வை! காலை தலைப்பு செய்திகள்!

Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு: 

  • ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் திடீர் வாபஸ்; எடப்பாடி பழனிசாமி அணிக்கு இரட்டை இலை சின்னம் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • சட்டக்கல்லூரி, அண்ணா நூற்றாண்டு நூலகம் உள்பட நூலக பணிகளில் 35 காலிப்பணியிடங்கள் - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
  • பருவம் தவறிய கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ.20,000 நிவாரணம் - முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவிப்பு
  • ராமநாதபுரத்தில் விரைவில் விமான நிலையம் 
  • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான தமிழ்நாடு அரசின் நலத்திட்ட உதவிகள் தாமதமில்லாமல் போய் சேர வேண்டும் - முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவு
  • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - திமுகவில் 40 நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு
  • குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் பிழையை திருத்த அவகாசம் - சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ கோரிக்கை
  • ஆன்லைன் சூதாட்டத்தினால் பணத்தினை இழந்து மேலும் ஒருவர் உயிரிழந்தை அடுத்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.
  • ”உதயநிதி ஸ்டாலின் கவனத்திற்கு தெரியுமா?, தெரியாதா? என்பதை எல்லாம் மதுரை மக்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்” - ஆர்.பி.உதயகுமார்.

இந்தியா:

  • அதானி குறித்த விவாதத்தை தவிர்க்கவே மோடி முயற்சிப்பார் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
  • மொழிவாரி சிறுபான்மை மாணவர்களுக்கு தமிழ் தேர்விலிருந்து மேலும் ஓராண்டு விலக்கு - உச்சநீதிமன்றம் உத்தரவு
  • கிறித்துவ மத தலைவரான போப் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வர உள்ளதாக அறிவித்துள்ளார்.
  • பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எச்ஏஎல் நிறுவனம் 1,000 ஹெலிகாப்டர்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.
  • பல்வேறு தொழில்நிறுவனங்களின் வரிசையில் டெல் நிறுவனமும் ஆறாயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • அதானி குழுமத்திற்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காத்து வருவதாக காங்கிரஸ் கட்சி நேற்று நாடுதழுவிய போராட்டத்தில் ஈடுபட்டது. 
  • அலகாபாத் உயர்நீதிமன்றம், கர்நாடகா உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய கூடுதல் நீதிபதிகளை மத்திய அரசு நியமித்துள்ளது.

உலகம்:

  • துருக்கி-சிரியா நில நடுக்கம் பலி எண்ணிக்கை 3,800 ஆக உயர்வு...!
  • கராச்சியில் பிப்ரவரி 1 முதல் பெண்களுக்கான இளஞ்சிவப்பு பேருந்து சேவையை தொடங்க பாகிஸ்தான் அரசு ஏற்கனவே முடிவு செய்திருந்தது. இந்நிலையில் இந்த வாரத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 
  • துருக்கி மற்றும் சிரியா பகுதியில் இந்திய நேரப்படி நேற்று மாலை 04.06 மணி அளவில் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 7.5ஆக பதிவாகியுள்ளது.
  • துருக்கி-சிரியா நில நடுக்கம் பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடக்கலாம் - அமெரிக்கா

விளையாட்டு:

  • இந்தியாவில் முதன்முறையாக நடைபெற உள்ள மகளிர் ஐ.பி.எல். வரும் மார்ச் 4-ந் தேதி தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
  • இந்திய அணிக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாகிஸ்தான் முன்னாள் வீரரான ஜாவேத் மியான்தத் வலியுறுத்தியுள்ளார்.
  • அகில இந்திய பாரா வாலிபால் போட்டி : ராஜஸ்தான் அணி முதலிடமும், கர்நாடக மாநில அணி இரண்டாமிடமும், தமிழ்நாடு மற்றும் ஹரியானா அணிகள் மூன்றாமிடமும் பிடித்தன.
  • அஸ்வின் பந்து வீச்சை எதிர்கொள்வது சவாலாக இருக்கும் என்று ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் கவாஜா கூறியுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

புயல் எங்கே உள்ளது? நாளை எங்கெல்லாம் விடுமுறை ? ரெட் அலர்ட் எங்கு: முக்கிய வானிலை அப்டேட்.!
புயல் எங்கே உள்ளது? நாளை எங்கெல்லாம் விடுமுறை ? ரெட் அலர்ட் எங்கு: முக்கிய வானிலை அப்டேட்.!
TN Rain; கனமழை எதிரொலி மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை இரண்டாவது நாளாக விடுமுறை...!
இரண்டாவது நாளாக நாளை மயிலாடுதுறை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை...!
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
Viduthalai 2 Trailer : வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை 2 பட டிரைலர் இதோ
Viduthalai 2 Trailer : வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை 2 பட டிரைலர் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
புயல் எங்கே உள்ளது? நாளை எங்கெல்லாம் விடுமுறை ? ரெட் அலர்ட் எங்கு: முக்கிய வானிலை அப்டேட்.!
புயல் எங்கே உள்ளது? நாளை எங்கெல்லாம் விடுமுறை ? ரெட் அலர்ட் எங்கு: முக்கிய வானிலை அப்டேட்.!
TN Rain; கனமழை எதிரொலி மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை இரண்டாவது நாளாக விடுமுறை...!
இரண்டாவது நாளாக நாளை மயிலாடுதுறை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை...!
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
Viduthalai 2 Trailer : வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை 2 பட டிரைலர் இதோ
Viduthalai 2 Trailer : வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை 2 பட டிரைலர் இதோ
Akhil Akkineni Engaged: நாக சைதன்யா திருமணத்திற்கு முன் இரண்டாவது மகன் அகிலுக்கு நிச்சயதார்த்தத்தை முடித்த நாகர்ஜுனா - அமலா!
Akhil Akkineni Engaged: நாக சைதன்யா திருமணத்திற்கு முன் இரண்டாவது மகன் அகிலுக்கு நிச்சயதார்த்தத்தை முடித்த நாகர்ஜுனா - அமலா!
TN Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இன்று இரவு 34 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இன்று இரவு 34 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
DMK VS PMK:
"வேறு வேலை இல்லை" அனல் பறக்கும் அரசியல் களம்.. முதலமைச்சர் கோபத்தின் பின்னணி ?
Embed widget