மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
7 AM Headlines: நேற்றைய நாளில் நடந்தது என்ன?.. சட்டென அறிய... காலை 7 மணி தலைப்பு செய்திகள் இதோ..!
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- கார்ல் மார்க்ஸின் சிந்தனை தான் ஒரு காலத்தில் இந்தியாவை சிதைத்தது - இந்தியாவின் அண்மை கால வளர்ச்சி இந்து வளர்ச்சி விகிதம் என ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்தால் சர்ச்சை
- திருவாரூரில் சமீபத்தில் காணொலி மூலம் தொடங்கி வைத்த நெல் சேமிப்பு கிடங்கை நேரில் சென்று ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- உண்ணாவிரதம், மெழுகுவர்த்தி பேரணியை தொடர்ந்து பாஜக தலைவர் அண்ணாமலை ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் சந்திப்பு - ராணுவ வீரர் கொலையில் முதலமைச்சர் மௌனம் சாதிப்பதாக குற்றச்சாட்டு
- திமுக கவுன்சிலர் ஏவிய கூலிப்படையால் ராணுவ வீரர் கொல்லப்பட்ட விவகாரம் - உண்மையில் மிகவும் கவலைக்குரிய விஷயம் என ஆளுநர் மாளிகை ட்வீட்
- திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை தொடர்பாக மேலும் இருவர் கைது - கர்நாடகா மாநிலம் கோலார் பகுதியில் இருந்தவர்களை சுற்றி வளைத்தது தனிப்படை
- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய ஏற்பாடு என புகார் - ஆடைகள் வழங்குவதாக திமுக மீது தேமுதிக குற்றச்சாட்டு
- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பரிசு பொருட்கள் கொடுத்ததாக 2 வழக்குகள் பதிவு - கட்டுப்பாட்டு அறைக்கு வந்த 450 புகார்கள் அடிப்படையில் 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலர் தகவல்
- 5 மாதங்களில் மகளிருக்கான உரிமைத் தொகை குறித்த அறிவிப்பு வரும் - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
- விசிக தலைவர் திருமாவளவனுடன் நடிகை காயத்ரி ரகுராம் திடீர் சந்திப்பு - மரியாதை நிமித்தமான சந்திப்பு என ட்விட்டரில் காயத்ரி ட்வீட்
- பழனி முருகன் கோவிலில் 3வது நாளாக உண்டியல் எண்ணும் பணி இன்றும் நடைபெறுகிறது - இதுவரை ரூ.5 கோடி வசூல்
இந்தியா:
- பஞ்சாப்,ஹரியானா உள்ளிட்ட 8 மாநிலங்களில் உள்ள 70 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை - ஏராளமான ஆயுதங்கள், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்
- உத்தராகண்டில் எப்போது வேண்டுமானாலும் பயங்கர நிலநடுக்கம் ஏற்படலாம் - தேசிய புவிசார் இயற்பியல் ஆய்வு நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி எச்சரிக்கை
- நேபாளம் வழியாக இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்ட ரூ.51 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் - வருவாய் உளவுத்துறை இயக்குநரக அதிகாரிகள் அதிரடி
- புதுமை, நவீனமயமாக்கலுக்கு உகந்த சூழலுக்கு இந்தியா முன்னுரிமை - சிங்கப்பூருடன் பணப்பரிவர்த்தனை செய்யும் இணைய வழி இணைப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு
- திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க மார்ச் மாத கட்டண சேவை டிக்கெட்டுகள் இன்று வெளியாகிறது - முன்பதிவு மாலை தொடங்கும் என தேவஸ்தானம் அறிவிப்பு
- சிவசேனா கட்சி தலைவராக ஏக்நாத் ஷிண்டே தேர்வு - மும்பையில் நடந்த தேசிய செயற்குழு கூட்டத்தில் அறிவிப்பு
உலகம்:
- சீனாவில் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க புதிய யோசனை அமல் - புதுமண தம்பதிகளுக்கு சம்பளத்துடன் ஒருமாதம் விடுப்பு வழங்க மாகாண அரசுகள் முடிவு
- உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு ஒருபோதும் வெற்றி கிடைக்காது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து - போர் தொடுத்து ஓராண்டாகியும் உக்ரைன் வலுவாக இருப்பதாக பாராட்டு
- வெளிநாட்டு நிதி பெற்ற வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு முன்ஜாமீன் வழங்கியது லாகூர் உயர்நீதிமன்றம்
- துருக்கியில் மீண்டும் அடுத்தடுத்து நிலநடுக்கம் - 3 பேர் பலியான நிலையில் 200க்கும் மேற்பட்டோர் படுகாயம்
விளையாட்டு:
- சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து இந்திய வீராங்கனை சானியா மிர்ஸா ஓய்வு பெற்றார்
- மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் வங்கதேசத்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அரையிறுதிக்கு முன்னேற்றம்
- உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் ருத்ராங்ஷ் பட்டீல் தங்கம் வென்றார்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
இந்தியா
தேர்தல் 2024
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion