Headlines: சுடச்சுட டீயை குடிச்சுகிட்டே தலைப்புச்செய்திகளை படிங்க.. இதோ உங்களுக்காக..!
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
மத்திய பட்ஜெட் தமிழக மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தும் வகையிலேயே உள்ளது - முதலமைச்சர் ஸ்டாலின்
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைதேர்தலில் போட்டி வேட்பாளரகளை அறிவித்த ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணி
பேனா சின்னத்தை ஆதரிப்பதோ, எதிர்ப்பதோ எங்கள் நிலைப்பாடு அல்ல. நல்ல நோக்கத்திற்காக அவர்கள் செய்கிறார்கள், அதை நாம் பாராட்ட வேண்டும் - ஓ. பன்னீர்செல்வம்
இந்தியா:
2023-24ஆம் நிதியாண்டில் ரூ.15.43 லட்சம் கோடி கடன் வாங்க மத்திய அரசு முடிவு நிதி பற்றாக்குறை மொத்த ஜிடிபியில் 4.5 சதவீதமாக கொண்டு வரப்படும் என கணிப்பு
மொபைல் போன், கேமரா, டிவி உதிரிபாகங்களுக்கான அடிப்படை இறக்குமதி வரி 2.5 சதவீதமாக குறைப்பு தங்கம், வெள்ளி, வைரம், பித்தளை, சிகரெட் உள்ளிட்டவற்றின் இறக்குமதி வரி அதிகரிப்பு
தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்வு ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் வரை ஈட்டுபவர்கள் வருமான வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை
'வளர்ந்த நாடாக இந்தியாவை உருவாக்குவதற்கான அடித்தளம் அமைக்கும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளது - பிரதமர் மோடி பாராட்டு
பங்குச்சந்தை மூலம் 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதி திரட்டும் முடிவை அதானி குழுமம் திரும்பப் பெற்றது. முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப வழங்கவும் முடிவு
ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரர் அந்தஸ்தை இழந்தார் கவுதம் அதானி. உலக பணக்காரர்கள் பட்டியலில் 15வது இடத்திற்கு தள்ளப்பட்டார்
உலகம்:
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் கடற்கரை இல்லத்தில் எஃப்பிஐ அதிகாரிகள் மீண்டும் சோதனை.. துணை அதிபராக இருந்தபோது கோப்புகளை சட்டவிரோதமாக வைத்து இருந்த குற்றச்சாட்டில் நடவடிக்கை
பிரிட்டனில் அரசு ஊழியர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தம்.. ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்
விளையாட்டு:
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில் இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி - தொடரையும் 2-1 என கைப்பற்றி அசத்தல்
நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சதம் விளாசி அசத்திய இந்திய வீரர் சுப்மன் கில் - மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இளம் வயதிலேயே சதமடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் வருகிற 23, 24 ஆகிய தேதிகளில் நடக்கிறது.
ஏலத்தில் வீரர்களின் அடிப்படை விலை முறையே ரூ.3 லட்சம் (ஏ பிரிவு), ரூ.2 லட்சம் (பி), ரூ.1 லட்சம் (சி), ரூ.50 ஆயிரம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது
சினிமா:
விஜய் நடிக்கும் ‘தளபதி 67’ படத்தின் பூஜை நிகழ்ச்சி வீடியோவை வெளியிட்டது தயாரிப்பு நிறுவனம்.. இணையத்தில் வீடியோ வைரல்
வாத்தி’ படத்தின் இசை வெளியீட்டு விழா பிப்ரவரி 4ம் தேதி நடைபெற உள்ளதாக படக்குழு அறிவிப்பு