மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: உலகம் முதல் உள்ளூர் செய்திகள் வரை அறிய வேண்டுமா? இதோ காலை 7 மணி தலைப்பு செய்திகள்!
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- ஸ்ரீபெரும்புதூர் - வாலாஜாபேட்டை 6 வழிச்சாலை பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் - தமிழக அரசு அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
- பரந்தூரில் விமான நிலையம் அமைக்க நீடிக்கும் எதிர்ப்பு - 200வது நாளாக போராட்டம் நடத்தி வரும் 13 கிராம மக்கள்
- எருது விடும் விழாவுக்கு அனுமதி வழங்கக்கோரி ஓசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வன்முறை நிகழ்ந்த விவகாரம் - கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்பிரிவில் பணியாற்றிய 30 காவலர்கள் இடமாற்றம்
- மத்திய பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு குறைந்த நிதி ஒதுக்கியதாக குற்றச்சாட்டு - தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் விவசாயிகள் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம்
- கோவை அரசு மருத்துவமனையில் 3 நாளாக நடந்த ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் போராட்டம் வாபஸ் - ஒரு வாரத்தில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வட்டாட்சியர்,டீன் உறுதி
- சென்னையில் அதிகரித்துள்ள கொசுத்தொல்லை - ட்ரோன்கள் மூலம் மருந்து தெளித்து கொசு ஒழிக்கும் பணியில் மாநகராட்சி தீவிரம்
- சீனாவின் வளர்ச்சி மற்ற நாடுகளுக்கு கலக்கத்தை தருவதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு - சர்வதேச பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நாடாக இந்தியா பார்க்கப்படுவதாக பெருமிதம்
இந்தியா:
- காங்கிரசும் கம்யூனிஸ்டும் கேரளாவில் எதிரிகள்; திரிபுராவில் நண்பர்களா? - திரிபுரா தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி கேள்வி
- மாதாந்திர பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு - வரும் 17 ஆம் தேதி நடை திறந்திருக்கும் என அறிவிப்பு
- அதானி குழுமம் மீதான புகார்கள் குறித்த விசாரணை தீவிரம் - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி
- பெங்களூருவில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் நிரந்தர தொடர்பில் இருந்த கணினி மென்பொறியாள பயங்கரவாதி கைது
உலகம்:
-
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆயிரமாக உயர்வு - 100 மணி நேரத்திற்கு பிறகும் உயிரோடு மீட்கப்படுபவர்களால் துளிர்விடும் நம்பிக்கை
-
துருக்கி, சிரியாவில் தரைமட்டமான கட்டிட இடிபாடுகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் தமிழக ட்ரோன் நிறுவனம் - உயிருடன் இருப்பவர்களை கண்டறியவும், மருந்துகள் வழங்கவும் நடவடிக்கை
-
அமெரிக்க வான் பரப்பில் பறந்த மர்மப் பொருளை சுட்டு வீழ்த்திய போர் விமானங்கள்
-
சூரியனின் மேற்பரப்பில் உடைந்த பெரிய பகுதி - வடதுருவ பகுதியில் சூறாவளி போன்று சுழற்சி ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தகவல்
விளையாட்டு:
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நாக்பூர் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி - இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை
- ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ் அணி சாம்பியன்ஷிப் தொடர் - இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்தியா
- மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டி: பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் இருந்து இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா விலகல்
- மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டி: நியூசிலாந்தை 97 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி
- மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion