மேலும் அறிய

Tirupati Laddu: சர்ச்சைக்கு பிறகு சக்கைப் போடு போடும் லட்டு விற்பனை! திருப்பதியில் அசத்தல்!

விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட நெய் பயன்படுத்தப்பட்ட சர்ச்சை எழுந்த பிறகு திருப்பதியில் லட்டு விற்பனை முன்பைவிட அதிகளவில் நடைபெற்று வருகிறது.

உலகப்புகழ்பெற்ற திருக்கோயில் திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆகும். இந்த கோயில் மட்டுமின்றி இங்கு வழங்கப்படும் பிரசாதமும் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். கடந்த ஜெகன்மோகன் ஆட்சியில் திருப்பதியில் வழங்கப்பட்ட லட்டு தயாரிக்கப்பட்ட நெய்யில் மாட்டுக் கொழுப்பு மற்றம் பன்றிக் கொழுப்பு கலக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியது. இந்த விவகாரம் ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சர்ச்சைக்கு பின் லட்டு விற்பனை:

தேவஸ்தானமும் இதை ஒப்புக்கொண்டுள்ள நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஆந்திர அரசு சிறப்பு விசாரணைக்குழு அமைத்துள்ளது. திருப்பதியின் புனிதத்தன்மை கெட்டுவிட்டதாக கூறி தோஷ பரிகாரமாக மகா சாந்தி ஹோமமும் நடத்தப்பட்டது. இந்த விவகாரத்திற்கு பிறகு திருப்பதி கோயிலில் லட்டு விற்பனை சரியும் என்றே பலரும் எதிர்பார்த்தனர்.

ஆனால், முன்பை காட்டிலும் லட்டு விற்பனை திருப்பதியில் சக்கை போடு போட்டு வருகிறது.  வழக்கமாக தினசரி 3.50 லட்சம் லட்டுகள் விற்பனையாகி வந்த சூழலில், தற்போது தினசரி 4 லட்சத்திற்கும் மேற்பட்ட லட்டுகள் விற்பனையாகி வருகிறது. திருப்பதி கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவலில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

4 நாட்களில் விற்பனை அமோகம்:

இதன்படி, செப்டம்பர் 19ம் தேதி 3.59 லட்சம் லட்டுகளும், செப்டம்பர் 20ம் தேதி  3.17 லட்சம் லட்டுகளும், செப்டம்பர் 21ம் தேதி 3.67 லட்சம் லட்டுகளும், செப்டம்பர் 22ம் தேதி 3.60 லட்டுகளும் விற்பனையாகி இருப்பதாக திருப்பதி தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பு வரை திருப்பதியில் தினசரி 3.50 லட்சம் லட்டுக்கள் மட்டுமே விற்பனையாகி வந்த நிலையில், தற்போது தினசரி கூடுதலாக 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை லட்டுகள் விற்பனையாகி வருகிறது. கடந்த நான்கு நாட்களில் மட்டும் 14 லட்சத்திற்கும் அதிகமான லட்டுகள் விற்பனையாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

சர்ச்சைக்கு பிறகு லட்டு விற்பனை சரியும் என்று பலரும் கருதிய நிலையில் லட்டு விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும், லட்டின் தரமும், மணமும் தரமானதாக இருப்பதாகவும் பக்தர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். திருப்பதியில் லட்டு விவகாரத்தில் எழுந்த சர்ச்சை காரணமாக பக்தர்கள் தங்களது வீடுகளில் விளக்கு ஏற்றி வழிபடுங்கள் என்று கோரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, விளக்கு ஏற்றி பொதுமக்கள் வழிபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த லட்டு விற்பனை மூலமாக திருப்பதி கோயிலுக்கு ஆண்டுதோறும் ரூபாய் 500 கோடிக்கும் அதிகமான வருவாய் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

”இந்துக்கள் மதம் மாறக்கூடாது.. , சூரசம்ஹாரம் செய்வோம்!  அட்டாக் மோடில் இறங்கி அடித்த அண்ணாமலை
”இந்துக்கள் மதம் மாறக்கூடாது.. , சூரசம்ஹாரம் செய்வோம்! அட்டாக் மோடில் இறங்கி அடித்த அண்ணாமலை
”அரேபியாவில் இருந்த வந்தவங்க கிட்ட கேட்க முடியுமா? துணிச்சல் இருக்கா?” பவன் கல்யாண் சர்ச்சை பேச்சு
”அரேபியாவில் இருந்த வந்தவங்க கிட்ட கேட்க முடியுமா? துணிச்சல் இருக்கா?” பவன் கல்யாண் சர்ச்சை பேச்சு
"இந்து என்பதால் கொல்லப்படுகிறார்கள்" முருகன் மாநாட்டில் அண்ணாமலை சர்ச்சை கருத்து
Iran Israel War: ஈரானை அடித்தால் இந்தியாவுக்கு ஏன் வலிக்குது? இத்தனை பொருட்களா அங்க இருந்து வருது?
Iran Israel War: ஈரானை அடித்தால் இந்தியாவுக்கு ஏன் வலிக்குது? இத்தனை பொருட்களா அங்க இருந்து வருது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஓட்டுனருக்கு அடி, உதை அடாவடி செய்த இளைஞர்கள் வெளியான சிசிடிவி காட்சி
”கர்பமா இருக்க என்ன அடிச்சான்” உறைய வைக்கும் ஆதாரம் அஸ்மிதா உருக்கம் |  Shri Vishnu | Ashmitha
பயம் காட்டும் பாஜக தொகுதி மாறும் ஜெயக்குமார் எடப்பாடிக்கு தூது | EPS | ADMK BJP Alliance
எ.வ.வேலு-பாமக அருள் சந்திப்பு! திமுகவுடன் ராமதாஸ் கூட்டணி? ரவுண்டு கட்டும் அன்புமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”இந்துக்கள் மதம் மாறக்கூடாது.. , சூரசம்ஹாரம் செய்வோம்!  அட்டாக் மோடில் இறங்கி அடித்த அண்ணாமலை
”இந்துக்கள் மதம் மாறக்கூடாது.. , சூரசம்ஹாரம் செய்வோம்! அட்டாக் மோடில் இறங்கி அடித்த அண்ணாமலை
”அரேபியாவில் இருந்த வந்தவங்க கிட்ட கேட்க முடியுமா? துணிச்சல் இருக்கா?” பவன் கல்யாண் சர்ச்சை பேச்சு
”அரேபியாவில் இருந்த வந்தவங்க கிட்ட கேட்க முடியுமா? துணிச்சல் இருக்கா?” பவன் கல்யாண் சர்ச்சை பேச்சு
"இந்து என்பதால் கொல்லப்படுகிறார்கள்" முருகன் மாநாட்டில் அண்ணாமலை சர்ச்சை கருத்து
Iran Israel War: ஈரானை அடித்தால் இந்தியாவுக்கு ஏன் வலிக்குது? இத்தனை பொருட்களா அங்க இருந்து வருது?
Iran Israel War: ஈரானை அடித்தால் இந்தியாவுக்கு ஏன் வலிக்குது? இத்தனை பொருட்களா அங்க இருந்து வருது?
துர்கா ஸ்டாலினும் கந்த சஷ்டி பாட வேண்டும் - முதலமைச்சர் மனைவிக்கு எல்.முருகன் வேண்டுகோள்
துர்கா ஸ்டாலினும் கந்த சஷ்டி பாட வேண்டும் - முதலமைச்சர் மனைவிக்கு எல்.முருகன் வேண்டுகோள்
GBU 57 Bomb:
GBU 57 Bomb: "பங்கர் பஸ்டர் பாம்" அணு ஆயுதம் அல்லாத மிகப்பெரிய ஏவுகணை, துளை போட்டு இலக்கை தூக்கும்
Iran Israel War: ஈரான் இந்த ஒரு முடிவு எடுத்தால்... இந்தியாவில் எகிறும் விலைவாசி - என்ன முடிவு அது?
Iran Israel War: ஈரான் இந்த ஒரு முடிவு எடுத்தால்... இந்தியாவில் எகிறும் விலைவாசி - என்ன முடிவு அது?
LIVE | Kerala Lottery Result Today (22.06.2025): சம்ருதி கேரள லாட்டரில சக்கைப்போடு போடப்போவது யாரு?
LIVE | Kerala Lottery Result Today (22.06.2025): சம்ருதி கேரள லாட்டரில சக்கைப்போடு போடப்போவது யாரு?
Embed widget