மேலும் அறிய

Pawan Kalyan: தென்னிந்திய இந்துத்துவாவின் முகமாகும் பவன் கல்யாண்? சனாதனம், அட்டாக் மோட், எடுபடுமா வியூகம்?

AP Deputy cm Pawan kalyan: ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண், தென்னிந்தியாவில் இந்துத்துவாவின் முகமாக மாறும் நோக்கில் செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

AP Deputy cm Pawan kalyan: திருப்பதி லட்டு பிரசாதத்தில் கலப்படம் தொடர்பாக, துணை முதலமைச்சர் பவன் கல்யாண் 11 நாள் விரதத்தில் ஈடுபட்டுள்ளார். 

லட்டு விவகாரம் - பவன் கல்யாண் விரதம்

திருப்பதி லட்டு பிரசாதத்தில் கலப்படம் நிகழ்ந்துள்ளதாக வெளியாகியுள்ள குற்றச்சாட்டு நாடும் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஆந்திர துணை முதலமைச்சரும், ஜனசேனா தலைவருமான பவன் கல்யாண் கடும் கண்டனங்களை வெளிப்படுத்தியுள்ளார். திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமிக்கு அநீதி இழைக்கப்பட்டதாக கூறி, 11 நாள் பரிகார விரதத்திலும் ஈடுபட்டுள்ளார். திருமலைக்கு அடுத்தபடியாக, ஆந்திராவின் இரண்டாவது பெரிய கோயிலான விஜயவாடா கனக துர்க்கை அம்மன் கோயிலில் சுத்தம் செய்யும் பணிகளையும் மேற்கொண்டார்.

கொதிப்பில் பவன் கல்யாண்

துணை முதலமைச்சர் என்ற பொறுப்புடன் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுப்பேன் என்று களமிறங்காமல், ஏழுமலையானுக்கு அவமதிப்பு நிகழ்ந்துவிட்டதாக ஒரு பக்தரை போலவே பவன் கல்யாண் பேசி வருகிறார். இந்த விவகாரத்தில் எதிர்கருத்து கூறுபவர்கள் யாராக இருந்தாலும் சரி, நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் சரி, சனாதன தர்மம் தான் முதன்மையானது என்கிறார்.   இந்து தர்மத்தை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு சனாதன தர்ம வாரியம் அமைக்க வேண்டும் என ஜனசேனா கோரிக்கை விடுத்து வருகிறது. சனாதன தர்மத்தில் பவன் காட்டும் ஆர்வத்தை அவரது ரசிகர்களும் ,இந்துத்துவா தலைவர்களும் ஆதரித்து வரும் நிலையில், தென்னிந்திய அரசியலில் பவன் இந்துத்துவாவின் முகமாக மாற வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கணிக்கின்றனர்.

தென்னிந்தியாவில் இந்துத்துவா அரசியல் :

ஆரம்ப காலத்திலிருந்தே தென்னிந்தியாவில் உள்ளூர் பிரச்னைகள், வளர்ச்சி, மாநில கட்சிகளின் ஆதிக்கம், சாதி தொடர்பான இலக்குகள், வேலை வாய்ப்பு என்ற அடிப்படையில் மட்டுமே அரசியல் நடந்து வருகிறது. சனாதன தர்மம் மற்றும் மதம் சார்ந்த அரசியல் தென்னிந்தியாவில் அதிகம் எடுபடுவதில்லை. தமிழகத்தில் திராவிட இயக்க அரசியல் இன்னும் வலுவாக உள்ளது. ஜெயலலிதாவுக்குப் பிறகு அதிமுகவை தங்களுக்கு ஏற்ப மாற்றும் பாஜகவின் வியூகம் வெற்றிபெறவில்லை. அண்ணாமலையின் சோதனை கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பலனளிக்கவில்லை. சட்டசபை தேர்தலுக்குள் வலுப்பெற வேண்டும் என கருதும் சூழலில், நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார். அதன் மூலம் உள்ளூர் பிரச்னைகள் அரசியலில் முக்கிய நிகழ்ச்சி நிரலாக மாறி வருகிறது.

தெலுங்கானாவில் சமீபகாலமாக பாஜக ஓரளவு முன்னேற்றம் கண்டுள்ளது. இருப்பினும், வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகள் அங்கு தலையாய பிரச்னையாக உள்ளது. ஆந்திராவிலோ, பிரிவினைக்குப் பிறகு தலைநகர் கட்டுமானம் மற்றும் வளர்ச்சியில் தெலுங்கானாவுடன் போட்டியிடுவது ஆகியவை முக்கியப் பிரச்னைகளாக நிலவுகின்றன. 

கேரளா ஆரம்பத்திலிருந்தே மத அரசியலில் இருந்து முற்றிலுமாக விலகி உள்ளது. சில காலத்திற்கு முன்பு, தென்னிந்தியாவில் தங்களது நுழைவுப் புள்ளியாக கர்நாடகாவை பார்த்தது பாஜக. ஆனால் அங்கும் வளர்ச்சியே முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது. உள்ளூர் பாஜகவில் நடக்கும் கோஷ்டி மோதல்கள் கட்சியை ஆட்சியில் இருந்து விலக்கி வைத்துள்ளது.

தென்னிந்தியாவில் இந்துத்துவாவின் முகம் யார்?

எல்லாவற்றிற்கும் மேலாக, குறிப்பிட்ட தலைவர் அடிப்படையிலான அரசியலுக்குப் பழக்கப்பட்ட தென்னிந்தியாவில்,  இந்துத்துவா அரசியலுக்கு ஒரு பிரபலமான முகம் தேவை என்பதை பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் உணர தவறின. ஆனால், தற்போது பாஜகவுடன் மிக நெருக்கமாக இருக்கும் பவன் கல்யாண் , அந்த இடைவெளியை நிரப்பும் முனைப்பில் இருப்பதாக தேசிய அளவிலான அரசியலில் பேசப்பட்டு வருகிறது.

தேசிய அளவில் கவனம் ஈர்க்கும் பவன்:

திருமலை தெலுங்கு மாநிலங்களுக்கு மட்டுமான புனிதத் தலமல்ல. இது நாடு முழுவதும் மற்றும் உலகளாவிய இந்துக்களுக்கும் ஒரு உணர்வாக உள்ளது. தென்னிந்தியாவில் வெங்கடேஸ்வரராக ஏழுமலையானுக்கு எந்தளவு பிரசித்தம் இருக்கிறதோ, அதே அளவு வட இந்தியாவில் பாலாஜியாக பிரபலமாக இருக்கிறார். அப்படிப்பட்ட சூழலில் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பால் செய்யப்பட்ட நெய் பயன்படுத்தப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தி பக்தர்களை வேதனைப்படுத்தியுள்ளது. இதில் பவன் ஒரு தீர்க்கமான் நிலைப்பாட்டை எடுத்துள்ளார். அவரது தற்போதைய ஒவ்வொரு கருத்தும் தேசிய அளவில் பேசுபொருளாகிறது. சனாதன தர்மத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்ததால், சாதாரண இந்துக்கள் முதல் தீவிர இந்துத்துவா வரை பவனுக்கு ஆதரவு குவிந்து வருகிறது.

நண்பர்களை கண்டிக்கும் பவன் கல்யாண்:

சனாதன தர்ம விவகாரத்தில் நண்பர்கள் என்றும் பார்க்காமல் பவன் கல்யாண் அதிரடி கருத்துகளை தெரிவித்து வருகிறார். லட்டு குறித்து கார்த்திக் சொன்ன ஒரு நகைச்சுவைக்கு, பவன் பொங்கி எழுந்தார். இதன் விளைவாக கார்த்திக் மன்னிப்பும் கோரினார். லட்டு விவகாரத்தில் பிரகாஷ் ராஜின் கருத்துக்கும் பவன் கடுமையான எதிர்வினையாற்றினார். சனாதன தர்மம் விஷயத்தில் பின்வாங்கப் போவதில்லை என்றும், பவன் இதனை தனது அரசியல் வாழ்க்கையை நிலைப்படுத்துவதற்கான ஒரு உத்தியாக பயன்படுத்துவதாகவும் வல்லுநர்கள் கணிக்கின்றனர்.

அதிகரிக்கும் இந்துத்துவா ஆதரவு

கார்த்தி குறித்த கருத்துகளால் தமிழகத்தில் ஜனசேனா வைரலானது .சிரஞ்சீவியின்  குடும்பம் மற்றும் தெலுங்கு ஹீரோக்களுக்கு கர்நாடகாவில் ஆரம்பம் முதலே மோகம் அதிகம். மொழி ரீதியாக கன்னடத்திற்கும் தெலுங்குக்கும் உள்ள ஒற்றுமை நன்றாக உள்ளது. தமிழ்நாட்டில் இருந்தும் பவன் கல்யாணின் நிலைப்பாட்டிற்கு ஆதரவுக் குரல் எழுந்துள்ளது. ஏற்கனவே, தென்னிந்தியாவில் பவன் கல்யாணுக்கு என ஒரு ரசிகர் பட்டாளம் இருக்க, தற்போது இந்துத்துவா அதரவும் பெருகி வருவது, அவருக்கும், இந்துத்துவா அரசியலுக்கும் பெரும் உந்துகோலாக இருக்கும் என கணிக்கப்படுகிறது.

பவன் கல்யாண் இமேஜ்..!

பவன் கல்யாண் நேர்மையானவர் என ஒரு இமேஜை வைத்திருக்கிறார். அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் அபார வெற்றி, லட்டு விவகாரத்தில் தனது நிலைப்பாடு ஆகியவற்றால் தென்னிந்திய அரசியலில் பவன் கல்யாணின் பெயர் மிகவும் பிரபலமாகியுள்ளது. அவர் இந்துத்துவ அரசியலின் எதிர்கால முகமாகவும் பார்க்கப்படுகிறார். இது பிஜேபியின் சூழ்ச்சியா அல்லது வியூகமா என்பது ஒருபுறமிருக்க, எதிர்கால தெற்கு அரசியலில் பவன் பங்கு ஒரு முக்கிய திருப்பத்தை எடுக்கப் போகிறது என்பதற்கான அறிகுறிகள் மிகவும் வலுவாக உள்ளன.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs AUS: திக்.. திக்.. கோலி, ஹர்திக் மிரட்டல்! பழி தீர்த்தது இந்தியா! அழும் ஆஸ்திரேலியா!
IND vs AUS: திக்.. திக்.. கோலி, ஹர்திக் மிரட்டல்! பழி தீர்த்தது இந்தியா! அழும் ஆஸ்திரேலியா!
PM Modi: சிங்கத்திற்கே பால் கொடுத்த பிரதமர் மோடி.. வந்தாரா வனக்காப்பகத்தில் மாஸ்!
PM Modi: சிங்கத்திற்கே பால் கொடுத்த பிரதமர் மோடி.. வந்தாரா வனக்காப்பகத்தில் மாஸ்!
EPS Slams DMK:
EPS Slams DMK:"ஏழை மக்களை ஏமாற்றுகின்ற ஆட்சி திமுக ஆட்சி... திமுக ஆட்சிக்கு முடிவு காலம் வந்துவிட்டது".
மக்களே! பட்டா, கிரையப் பத்திரம் உடனே வாங்கனுமா? இதுதான் வழி!
மக்களே! பட்டா, கிரையப் பத்திரம் உடனே வாங்கனுமா? இதுதான் வழி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS on BJP ADMK Alliance | அதிமுகவினரை வைத்தே ஸ்கெட்ச் ஆட்டம் காட்டிய பாஜக வழிக்கு வந்த EPS | Election 2026Tamilisai vs MK Stalin | தெலுங்கில் பிறந்தநாள் வாழ்த்து!முதல்வரை சீண்டிய தமிழிசை ஸ்டாலின்பதிலடிGovt School Issue | அரசு பள்ளியில் அவலம்!’’பாத்ரூம் கழுவ சொல்றாங்க’’  மாணவிகள் பகீர் புகார்PTR vs Karan Thapar | ’’உ.பி, பீகார் பத்தி பேசுவோமா?’’PTR தரமான சம்பவம் வாயடைத்துப்போன கரண் தபார்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs AUS: திக்.. திக்.. கோலி, ஹர்திக் மிரட்டல்! பழி தீர்த்தது இந்தியா! அழும் ஆஸ்திரேலியா!
IND vs AUS: திக்.. திக்.. கோலி, ஹர்திக் மிரட்டல்! பழி தீர்த்தது இந்தியா! அழும் ஆஸ்திரேலியா!
PM Modi: சிங்கத்திற்கே பால் கொடுத்த பிரதமர் மோடி.. வந்தாரா வனக்காப்பகத்தில் மாஸ்!
PM Modi: சிங்கத்திற்கே பால் கொடுத்த பிரதமர் மோடி.. வந்தாரா வனக்காப்பகத்தில் மாஸ்!
EPS Slams DMK:
EPS Slams DMK:"ஏழை மக்களை ஏமாற்றுகின்ற ஆட்சி திமுக ஆட்சி... திமுக ஆட்சிக்கு முடிவு காலம் வந்துவிட்டது".
மக்களே! பட்டா, கிரையப் பத்திரம் உடனே வாங்கனுமா? இதுதான் வழி!
மக்களே! பட்டா, கிரையப் பத்திரம் உடனே வாங்கனுமா? இதுதான் வழி!
சட்டசபையில் பீடா போட்டு துப்பிய உ.பி எம்.எல்.ஏ: யார்னு தெரியும், தனியா வரச் சொன்ன சபாநாயகர்.!
சட்டசபையில் பீடா போட்டு துப்பிய உ.பி எம்.எல்.ஏ: யார்னு தெரியும், தனியா வரச் சொன்ன சபாநாயகர்.!
DMDK-ADMK: வாய்விட்ட இபிஎஸ்.! உடைகிறதா அதிமுக-தேமுதிக கூட்டணி? ட்விட்டை டெலிட் செய்த பிரமேலதா.!
வாய்விட்ட இபிஎஸ்.! உடைகிறதா அதிமுக-தேமுதிக கூட்டணி? ட்விட்டை டெலிட் செய்த பிரமேலதா.!
தஞ்சாவூர் மக்களே வரும் 6ம் தேதி வரை 12 மணிக்கு வெளியில் வராதீங்க... எதுக்கு தெரியுங்களா?
தஞ்சாவூர் மக்களே வரும் 6ம் தேதி வரை 12 மணிக்கு வெளியில் வராதீங்க... எதுக்கு தெரியுங்களா?
நயன்தாரா மீண்டும் அம்மனாக அவதாரம் எடுக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' படத்திற்கு பூஜை போட்டாச்சு!
நயன்தாரா மீண்டும் அம்மனாக அவதாரம் எடுக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' படத்திற்கு பூஜை போட்டாச்சு!
Embed widget